Tuesday 8 January 2013

டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் உண்மையில் மகிழ்ச்சியை தரும்வேளையில் இந்த நாட்டில் தலித்துகள்,பழங்குடியினருக்கு எதிரான இதே போன்ற கொடுமைகளும்,அதற்கு நீதி கேட்டு அவர்கள் செல்லும் நெடும் பயணமும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

அதிலும் கேள்விகேட்க நாதியில்லாத இருளர் பழங்குடியினர் பெண்களுக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த வன்கொடுமைகளுக்கு எதிராக ஆங்காங்கே முணுமுணுப்புகள்தான் இருந்தனவே ஒழிய இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை என்பது வேதனையான ஒன்று.

எங்கோ தென்தமிழகத்தில் பிற்பட்டவகுப்பில் பிறந்து அரசு கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிய வந்த இடத்தில் இது போன்ற நாதியற்ற மக்களின் துயர் கண்டு திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டு தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வரும் பேராசிரியர்.கல்யாணி என் பார்வையில் மற்றவர்களைவிட ஒருபடி மேலே தெரிகிறார்.

பேராசிரியர் அய்யா அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களினால் இருளர் இன மக்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள்,அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

No comments:

Post a Comment