Tuesday 8 January 2013

உலக அழிவு


உலகத்தின் அழிவை என்னால் யூகிக்க முடிகிறது.

இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்கள் போல பகலில் வானத்தில் உயர உயர பறந்து திரிந்த பருந்துகளைக் காணோம்.

சிட்டுக்குருவிகள் மாயமாகிப்போயின.

கருடன் எனப்படும் அழகான செம்பருந்துகள் தேடினாலும் கிடைக்கவில்லை.

நீர் நிலைகள் எல்லாம் அசுத்தமாகிக் கொண்டிருகின்றன.

ஊரெங்கும் கொசுத்தொல்லை,காரணம் பூச்சிக்கொல்லிகளால் தவளைகள் அழிந்தன.கொசுக்களின் லார்வா புழுக்களைத்தின்னும் தலைப்பிரட்டை இல்லாததால் கொசுக்களுக்கு கொண்டாட்டம்.

இப்படி மனிதனின் தவறுகளால் ஒவ்வொரு உயிரினமாக காணாமல் போய் பூமி பொட்டல்காடாய் மாறும் என்பதே என் கணிப்பு.

விண்கல் மோதுவதாலோ,சுனாமி நிலத்தை விழுங்குவதாலோ,எரிமலைகளின் சீற்றத்தினாலோ அழிந்து போகும் என்றில்லை.பூமின் ஜீவராசிகளை அழிக்க மனித தவறுகளே போதும்.
 

No comments:

Post a Comment