Monday 5 August 2013

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு,தப்புகள் எல்லை மீறும் போது கடவுள் சும்மா இருக்கமாட்டார்.புயல்,வெள்ளம்,பூகம்பம்,சுனாமி,நிலநடுக்கம் வாயிலாக தண்டிப்பார்.
-நடிகர் அஜீத்குமார் (இன்றைய குமுதத்தில்)

அடப்பாவி! இயற்கை சீற்றங்களினால் உயிரிழப்பவர்கள் அத்தனை பேரும் பாவிகளா?சமீபத்தில் உத்தரகாண்ட் வெள்ளத்தில் செத்துப்போனவங்க எல்லோரும் பாவிகளா? இது போன்ற அறிவுஜீவிகளை எல்லாம் ரோல்மாடலா நெனச்சு சுத்திட்டு இருக்கிற நம்ம புள்ளைகளை என்னன்னு சொல்றது?

அஹிம்சையாவது,ஜீவகாருண்யமாவது

கடவுளுக்கு பலியிடும் ஆடு,கோழி போன்றவற்றை வெட்டும் முன்பாக வெட்டப் பயன்படுத்தும் அரிவாளைப் பார்ப்பனர்கள் முன் வைத்து தட்சணை தந்தாக வேண்டும் என்ற வழக்கம் நெல்லை மாவட்டத்தில் பார்ப்பனர்களால் அமல்படுத்தப்பட்டு வந்தது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

அஹிம்சையாவது,ஜீவகாருண்யமாவது,காசுதான் பாஸ் கடவுள்.அதில் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

கோயில்களில் தமிழ்

மக்களுக்குப் புரியாத சமஸ்கிருத ஸ்லோகங்கள் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்த தமிழகக் கோயில்களில் தேவார,திருவாசகப் பாடல்களும் ஒலித்திட முதன்முதலில் வழிவகை செய்து உத்தரவிட்ட பெருமைக்குரியவர் சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள். 

ஓமந்தூரார்

காங்கிரஸ் கட்சியை சார்ந்த முதல் அமைச்சராக இருந்தாலும் தந்தைபெரியார் காட்டிய வழியில் பல சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தியதால் வர்ணாசிரமவாதிகளால் தாடிவைக்காத ஈ.வெ.ராமசாமி என்று வெறுப்புடன் அழைக்கப்பட்டவர் ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள்.

ஓபிஆர்

தன்னுடைய சொத்துக்கள் எல்லாம் பசியால் வாடும் ஏழைகளின் பசிப்பிணியை போக்க பயன்படட்டுமே என்ற உயரிய நோக்கில் ”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் என் மனம் வாடியதே” என்று ஜீவகாருண்யம் போதித்த வள்ளலார் நிறுவிய வடலூர் சன்மார்க்க நிறுவனத்துக்கு தன் அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமிரெட்டியார் அவர்கள்.
கடவுளுக்கு பின்னால் இருக்கும் ஒளிவட்டம், அதை வரையும் ஓவியனால் தர முடியும் அல்லது தேருக்கு பின்னால் வரும் ஜெனரேட்டரால் மட்டுமே முடியும்.

உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே

உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே,அப்புறம் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனும்னு கேட்கறே?எவன் அர்ச்சகராக இருந்தா உனக்கென்ன?


அதானே!நீதான் ரேஷன்கடை பொருட்களை பயன்படுத்துவதில்லையே!அரிசி,பருப்பு,மண்ணெண்ணெய் விலையை ஏத்துனா உனக்கென்ன?

நீ காரிலும்,ப்ளேனிலும் பயணம் செய்யும் பணக்காரனாச்சே!அப்புறம் ஏன் பஸ் கட்டண உயர்வை பத்தி கவலைப்படறே?

நீதான் சொந்தமா சோலார் பேனல்,காற்றாலை வெச்சிருக்கியே!கரண்ட் பில் ஏறுனா உனக்கென்ன?

நம்மளை பாதிக்காத விஷயத்துக்கு நாம ஏன் கவலைப்படணும்?


ஆனால் நூறு நாள் வேலைத்திட்டம்,ஏரிவேலை இது குறித்தெல்லாம் கண்டிப்பா கவலைப்படணும்,ஏன்னா இந்த திட்டங்களால் நம்ம பண்ணையில் வேலை செய்ய ஆள் கிடைக்க மாட்டேங்கிறாங்களே.
வர்ரவன்,போறவன் எல்லாம் சிக்ஸ்,ஃபோர்னு அடிச்சிட்டு போகும் ஒரு பேட்டிங் பிட்ச் போல இந்தியா ஒரு காலத்தில் இருந்ததுன்னா அதற்கு காரணம் இந்து மதமே.இந்து மதம் இந்த நாட்டில் இருந்த மக்களிடையே ஏற்படுத்தி வைத்திருந்த ஒற்றுமையின்மையே இந்த நாடு பல துண்டுகளாக பிரிந்து கிடந்தது.அதனாலேயே ஆங்கிலேயன்,ஃப்ரெஞ்சுக்காரன்,டச்சு,அரேபியன்,ஆப்கானியன்,மங்கோலியன் என நினைத்தவனெல்லாம் போரடிக்கும் போதெல்லாம் இங்கே வந்து புகுந்து விளையாடினான்.

இப்போதிருக்கும் மதசார்பற்ற நாடு என்கிற ஒரு நிலைப்பாடு இருக்கும்வரைக்கும்தான் இந்த நாடு நிலைத்திருக்கும்,இந்துத்துவம் என் உயிர்மூச்சு போன்ற தத்துவங்கள் எல்லாம் வெற்றிபெறத் துவங்கினால் கண்டிப்பாக அதன் அடுத்த கட்டமாக வர்ணாசிரமம்,சாதி,மத மோதல்கள் எல்லாம் உச்சக்கட்டத்தை அடையத் துவங்கும்.விளைவு மக்களிடையே ஒரு பெரும் குழப்பமும்,பிரிவினைவாதமும் வலுவாக நிலைகொள்ளத்துவங்கி சரிசெய்திட முடியாத அளவுக்கு அமைதியின்மையும்,ஸ்திரமற்றத்தன்மையும் உருவாகி இந்த நாடு சிதறுண்டு போக வழிவகை செய்திடும்.

நந்தனார் வாழ்ந்த காலத்தில் தந்தைபெரியார்

உனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே,அப்புறம் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனும்னு கேட்கறே?எவன் அர்ச்சகராக இருந்தா உனக்கென்ன?

யப்பா மனுதர்மவாதிகளே! எந்த ஒரு சமூக அநீதி உங்களின் முயற்சியால் இந்த மண்ணிலிருந்து ஒழிக்கப்பட்டது?

நந்தனார் வாழ்ந்த காலத்தில் தந்தைபெரியார் போன்று ஒருவர் இருந்திருந்தால் நந்தன் தீயில் இறங்கி உயிர் துறந்திருப்பானா?

ஆத்தா இட்லி,தோசை,பூரி,பொங்கல் சாப்பிடாதா?

கூழ் காய்ச்சி வீட்டில் குடிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ,ஒவ்வொரு ஆடி மாசத்திலும் பக்கத்தில் இருக்கும் கோயிலில் கூழ் ஊத்தறாங்க.கோயிலில் இருக்கும் சிமெண்ட் தொட்டி போதாமல் வாடகைக்கு பேரல் கொண்டு வந்து கூழ் ஊத்தறாங்க,அதை எடுத்துட்டு போக ஆளில்லாமல் மாட்டுக்கும்,மீதியை அடுத்த நாள் கால்வாயிலும் கொட்டுகின்ற நிலைதான் பல இடங்களில் இருக்கிறது.காலம் மாறிப் போச்சே,கூழுக்கு பதிலா வேறு ஏதாவது மக்களைக் கவரும் விதமான உணவுகளை கோயில் திருவிழாவின் பெயரால் படைக்கலாம் அல்லவா?

உண்மை

ஆதிதிராவிடர்கள் (பஞ்சமர்) பொதுத்தெருக்களிலும்,ஏனைய சாலைகளிலும் எல்லோரையும் போல சகல சுதந்திரத்துடன் நடந்து செல்லலாம் என்று முதன்முதலாக அதற்கென்றே தனித்த ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில்தான் என்பதனை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

உண்மை

இதை பகுத்தறிவாளன் சொன்னால் குய்யோ,முய்யோன்னு சத்தம் வரும்,எங்க நம்பிக்கையை கேலி செய்யறீங்கன்னு கண்டனம் எழும்,ஆனால் இதை சுஜாதா அல்லவா சொல்லியிருக்காரு.


" சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, 'புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும்' - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..? "
" அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் (மற்றோரு கேள்விக்கு பதில் சொன்னபடி) மதநம்பிக்கையைக் காரணம் காட்டி
பணம் பகிர்ந்துகொள்ளும் உத்தியே! கோயிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லரை புரளும்! "
= சுஜாதாவின் கேள்வி - பதில் .
ஐய்யப்பன் கதை உண்மையோ பொய்யோ அது நடந்ததாகக் கூறப்படும் காலத்தை பாருங்கள்,மூவாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக கூறப்படும்,ஆனால் ஐய்யப்பனுக்கு வாவர் எனும் இஸ்லாமியத் தோழன் இருப்பதாக ஒரு செய்தியும் உண்டு.

இதைப் போலவே சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளின் அண்ணன் சேரன்செங்குட்டுவன் வாழ்ந்த காலம் கி.பி முதலாம் நூற்றாண்டு,ஆனால் அவன் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் முகம்மதுவால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாத்தில் சேர்ந்தான் எனவும் அவனுடைய சமாதி ஏமன் நாட்டில் இருப்பதாகவும் ஒரு தகவல் முகநூலில் பரப்பப்படுகிறது.

உண்மைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் வரலாற்றினை திரித்து கூறுவது கூட மக்களுக்கு செய்கின்ற ஒரு மோசடியே ஆகும்.