Friday 2 November 2012

கண்ணகி - அடிமைச்சின்னம்

சென்னை கடற்கரை சாலையில் போகும்போதெல்லாம் இந்த சிலையை காணும்போது இவள் மாதர்குல திலகமா அல்லது ஆணாதிக்க சமுதாயத்தின் அடிமைச்சின்னமா என்ற கேள்விதான் எழுகிறது.

கணவன் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கொல்லப்பட்டான் என்றவுடன் பொங்கியெழுந்து தன் காலில
் இருந்த சிலம்பை உடைத்து மன்னரின் நெஞ்சுக்கு நீதி சொல்லி மன்னரையும்,மகாராணியையும் வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் மதுரை மாநகரத்தையே தீக்கிரையாக்கிய துணிச்சல் கொண்ட ஒரு பெண் தன் கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்திக்கொண்டிருந்தபோதும் கணவனையே மனதால் தொழுது கொண்டிருந்தாள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவா இருக்கிறது?

கோவலன் வேறொரு பெண்ணிடம் வீழ்ந்து விட்டான் என்று அறிந்தவுடன் அவனை பொளேரென்று ஒரு அறை விட்டு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருந்தால் கோவலன் கள்வன் என்று கொல்லப்பட்டிருக்க மாட்டான் அல்லவா?செங்கோல் தவறாத மன்னரும்,மகாராணியும்,மதுரை மாநகரும் பிழைத்திருக்கும் அல்லவா?இது போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் பெண்கள் அனைவரும் ஆணுக்கு அடங்கி வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டிருக்குமோ?

உயிர்கள்

கடவுள் எல்லா உயிரினங்களிலும் ஒரு ஒரு ஜோடி படைச்சார்னா இந்த பாம்பு இருக்கே பாம்பு முதலில் படைக்கப்பட்ட எலியை பிடிச்சு தின்னிருக்கும் இல்லையா? அப்புறம் இந்த எலி இனம் எப்படி பெருகியிருக்கும்?

இல்லன்னா படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் குட்டிகள் போட்டு சந்ததிகளை பெருக்கும் வரை எதையும் சாப்பிடாமலேயே இனப்பெருக்கத்தில் மட்டுமே கவனமாக இருந்ததா?

மாப்பு வெச்சுட்டாங்கய்யா ஆப்பு.

கடைசியில் இப்புடி சங்கு ஊதிட்டாங்களே......இது அம்மாவோட ஆட்சி......மிரட்டல்,உருட்டல் எல்லாம் நடக்காது,அம்மா ஆட்சியில் நான் பாதுகாப்பாக என் பணிகளை பார்ப்பேன்னு சொன்ன நித்தியானந்தா குறித்து தமிழக அரசின் அட்வகேட்ஜெனரல் நீதிமன்றத்தில் தாக்கல் செ
ய்திருக்கும் வாதம் இதோ........

இவர் குண்நலன் சரியில்லாதவர்,ஒழுக்க நெறிகளை கடைபிடிக்காதவர்,இவர் மீது பல கிரிமினல் கேஸ்கள் இருக்கின்றன.இவர் இந்த மடத்துக்கு மட்டுக்குமல்ல, நாட்டில் இருக்கும் எந்த மடத்துக்கும் தலைவராக இருக்க தகுதியற்றவர்.

மாப்பு வெச்சுட்டாங்கய்யா ஆப்பு.......

அது நார வாய்....இது வேற வாய்.....

மக்களின் அறியாமை,ஞாபக மறதி ஆகியவற்றை சாதகமாக்கிக்கொண்டு சாமியார்கள் செய்யும் தில்லுமுல்லுகளுக்கு இதோ ஒரு உதாரணம்.

நேற்று மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மதுரை ஆதினத்தின் வழக்குரைஞர் கொடுத்திருக்கும் புகார் மனுவின் சுருக்கம் என்னவெனில
்,

நித்தியானந்தா மற்றும் சீடர்களால் எனக்கும் மடத்துக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கிறது,பாதுகாப்பு வேண்டும் என்பதே.

அடேங்கப்பா இதை முன்கூட்டியே சிவபெருமான் கனவில் வந்து சொல்லவில்லையா? இதே வாய்தான் சில மாதங்களுக்கு முன்பு சிவபெருமான் கனவில் வந்து நித்தியானந்தாவை அடுத்த ஆதினமாக நியமிக்க சொன்னார் என்று சொன்னது.இப்போது அதே நித்தியானந்தாவால் உயிருக்கு ஆபத்தாம்.

அன்று சிவபெருமான் சொன்னது பொய்யா? அல்லது மதுரை ஆதினம் சொன்னது பொய்யா?

அது நார வாய்....இது வேற வாய்.....அப்படித்தானே?????

டபுள்

பண்ருட்டி அருகே ஒரு பெண்,சீரடி சாய்பாபாவுக்கு படைக்கப்பட்ட அப்பத்தை ஒரு சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைத்து ஒரு வாரம் பூஜை செய்து திறந்து பார்த்தாராம்,ஒரு அப்பம் இருந்த டப்பாவில் இரண்டு அப்பம் இருந்ததாம்.

என்னுடைய சந்தேகம்... ஒரு பெரிய பங
்களாவை பெரிய தார்ப்பாய் போட்டு மூடி பயபக்தியோட சாய்பாபாவை பூசை செய்து ஒரு வாரம் கழித்து திறந்து பார்த்தால் இரண்டு பங்களாக்கள் இருக்குமா?

மின் உற்பத்தி நிலையங்களைல் இருக்கும் ஜெனரேட்டர்களை மூடி வைத்து சாய்பாபாவை நெஞ்சுருகி வேண்டினால் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு டபுள் மெகாவாட்டாக இருக்குமா? ஆம் என்றால் மூடுங்கப்பா மின் உற்பத்தி நிலையங்களை,தொடங்குங்கப்பா சாய்பாபா பூஜையை.

கழிப்பறை அவசியம் தேவை

"திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கும் போது, ராகு,கேதுக்களின் நிலை பார்ப்பதுடன், மணமகன் வீட்டில் கழிவறை உள்ளதா என பார்த்து, அது இருந்தால் மட்டுமே பெண்கள் திருமணம் செய்ய வேண்டும். கழிவறை இல்லை எனில் திருமணம் இல்லை என பெண்கள் கூறிவிட வேண்டும்."

-
 ராஜஸ்தான் கிராம மக்களிடம் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ்.

உண்மையில் இந்த மனிதரின் சமூக அக்கறை கவனத்தை ஈர்க்கிறது.

சில காலங்களுக்கு முன் ஒரு பட்டமளிப்பு விழாவில்,தேவையில்லாத, பொருந்தாத சம்பிரதாயங்கள் எதற்கு என கறுப்பு கவுனை அணிய மறுத்ததும் நினைவுக்கு வருகிறது.

டார்வின்

பரிணாமத்தத்துவம் தவறு,டார்வின் தியரி தவறு என்று கூறும் மதவாதிகளே, உங்களில் எத்தனை பேர் பள்ளி,கல்லூரி தேர்வுகளில் டார்வின் தியரி தவறு கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று எழுதியிருக்கிறீர்கள்?

இந்த டைனசரஸ் குறித்து உங்கள் கருத்து என்ன? இது குறித்தும்,இவை அழிந்தது குறித்தும் உங்கள் மத நூல்களில் ஏதேனும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

திருஷ்டிப்பூசணியா அல்லது புஷ்டிப்பூசணியா?

லட்சக்கணக்கான பூசணிக்காய்களை ரோட்டில் போட்டு உடைச்சு முடிச்சாச்சா? எத்தனை பேர் கை கால் உடைஞ்சதோ,எத்தனை பேருக்கு உயிர் போச்சோ?

உலகத்திலேயே மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காயின் அருமை பெருமைகள் தெரியாமல் அதன் மருத்துவ குணங்கள் தெரியாமல் மூட ந
ம்பிக்கையின் பெயரால் ரோட்டில் போட்டும் உடைக்கும் மக்கள் இந்த நாட்டைத்தவிர வேறு எங்கும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

என்னது வெண்பூசணியை சாப்பிடுவாங்களான்னு ஒரு கேள்வி வேற.

நீரிழிவு நோய்,சிறு நீரகக்கொளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள்,உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்கள்,மாதவிடாய்க்கொளாறுகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கக்கூடியது இந்த வெண்பூசணி.

இந்த வெண்பூசணியில் இருந்து தயாரிக்கப்படும் வெண்பூசணி லேகியம் இரத்தசோகை,ஊளைச்சதை குறைப்பு,எலும்புருக்கி நோய்,வெள்ளைப்படுதல்,உடல் பலம்,தாது விருத்தி,ஆகியவற்றுக்கு சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதன் அருமை தெரியாமல் யாரோ சொன்னாங்கன்னு ரோட்டில் போட்டு உடைக்கிறோம்.

ஆனால் இதை ரோட்டில் போட்டு உடைக்கும் பழக்கத்தை நமக்கு கத்துக்கொடுத்தவங்க வீட்டில் அடிக்கடி சமைக்கப்படும் பதார்த்தம் இது, இது சீசன் இல்லாத போது பயன்படுத்த இதை வற்றல் வேறு செய்து பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நாம திருஷ்டி சுத்தி ரோட்டில் போட்டு உடைக்கிறோம்.அவங்க விபரமாகவே இருக்காங்க,அதனால் சட்டியில் போட்டு சமைக்கிறாங்க.

ஒற்றை வரியில் சொல்லணும்னா, நமக்கு திருஷ்டிப்பூசணி,அவாளுக்கு உடலுக்கு வலுதரும் புஷ்டிப்பூசணி.

இனியாவது வாரத்துக்கு ரெண்டு முறை வெண்பூசணியை சமைச்சு சாப்பிடுங்க.அடிக்கடி அதில் ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள்.அனுபவித்த பிறகு தெரியும் அதன் அருமை.

பட்டு

மீன்களைக்கொல்லும் மீனவனை சிங்களைக்கடற்படையினர் கொல்வதில் என்ன தவறு? இதை சொன்னதில் என்ன தவறு கண்டு பிடிச்சிட்டீங்க?

என்னது நாங்க உடுத்தற பட்டுத்துணி பட்டுப்புழுக்களின் மரணத்தில் கிடைக்குதா? நல்லா இருக்கே உங்க நியாயம்? நாங்களா சாகடிக்கிறோம்? நெசவாளிதானே சாகடிக்கிறான்.

சின்மயி

பாடகி சின்மயி மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு,இட ஒதுக்கீடு குறித்தெல்லாம் தவறாக பேசினார் என்றெல்லாம் கூறுகிறார்கள்,உண்மை எதுவென்று தெரியவில்லை.

ஆனால் அவ்வாறு பேசியதாகக்கூறப்படும் சின்மயி மீது தாக்குதல் தொடுத்ததாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.காரணம் அவர்கள் கையாண்ட அநாகரிக வார்த்தைகள் மற்றும் அவர் குடும்பத்தின் மீதான தாக்குதல்கள்.

மக்களின் உணர்வுகளைத்தூண்டக்கூடிய இருபெரும் பிரச்சினைகள் கு
றித்து அவர் பேசியிருந்தாலும் அவை இன்று எடுபடவில்லை,காரணம் அவர் மீது தொடுக்கப்பட்ட கடுமையான வார்த்தைகள்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துக்கு பதில் கருத்துக்களை நாகரிகமான வார்த்தைகள் கொண்டு ஆதாரப்பூர்வமாக பதியும் போக்கு குறைவாகவே காணப்படுகிறது,எதற்கெடுத்தாலும்அடேய்,வாடா,போடா போன்ற த்தா...ம்மா போன்ற வசவுகள்தான் சகஜமாக காணப்படுகின்றன.

நாகரிகமான விவாதங்கள் மூலமாகவே எதிராளியை திணறடிக்க முடியும் என்பதை பலரும் உணருவதில்லை.

இன்று சின்மயியின் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் நாகரிகமான முறையில் வாதங்களை எடுத்து வைத்திருந்தார்களேயானால் சின்மயிக்கே பெரும் சிக்கல்களை சட்டரீதியாக உருவாக்கியிருக்க முடியும்.ஆனால் அவர்கள் வார்த்தைகளை கையாண்டவிதம் அவர்களை இக்கட்டான நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.

இனிமேலாவது விவாதங்களில் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை தவிர்த்து ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்ள முயலுங்கள்.

வாகன ஓட்டிக்கு ஹெல்மெட் எப்படி முக்கியமோ அதுபோல் சமூக வலைத்தளங்களில் எழுதுவோருக்கு நாகரிகமான வார்த்தைகள் முக்கியம்,பிரச்சினைகள் எழுந்தால் அவை தக்க பாதுகாப்பு கவசமாக அமைந்திடும்.

கோமாதா

இந்த முப்பத்துமுக்கோடி தேவர்கள் வசிப்பது இந்தியாவில் இருக்கும் மாடுகளின் உடம்பில் மட்டுமா? அல்லது வெளிநாட்டுக்காரன் வளர்க்கும் மாடுகளின் உடம்பிலுமா?

சசிதரூர்


மத்திய அமைச்சர் சசிதரூருக்கு காதலர் விவகாரத்துறை என்ற பெயரில் புதுத்துறை ஒன்றை உருவாக்கி அதற்கு அவரை அமைச்சராக்க வேண்டும் என்று பாஜக கிண்டலடித்திருக்கிறது.

கிண்டல் மட்டும்தானே? உண்மையில்லையே? அப்புறம் உண்மையாகவே அது மாதிரி ஒரு துறை அமைந்து
 விட்டால் வம்பாகிப்போய் விடுமே.

துணிச்சல் வந்து விடும்,காதலிப்பவர் எண்ணிக்கை அதிகமாகிவிடும்,சாதி மறுப்புத்திருமணங்கள் அதிகமாகிவிடும்,இது அதிகமானால் சாதி ஒழிந்து போகத்துவங்கும்.

அப்புறம் சாதி இல்லாட்டா வர்ணாசிரமம் என்னாகும்? இந்துத்வா கேலியாப்போய் விடுமே? எப்படி அப்புறம் இந்துத்வ அரசியல் எடுபடும்?

சீரியஸ் இல்லையே? சும்மனாங்காட்டியும் தமாசுக்குத்தானே சொன்னீங்க?
 

வரகரிசி

மாப்பு நமக்கு நாமே வெச்சுக்கிட்டோம் ஆப்பு.

சோள அரிசி (செஞ்சோளம், வெள்ள சோளம்) கம்பு அரிசி கேழ்வரகரிசி திணை அரிசி சாமை அரிசி வரகரிசி பனி வரகரிசி குதிரைவாலி அரிசி 

இவைகளை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? பயன்படுத்தியிருப்போம்?

ஆனந்த விகடனில் ஆறாம் தினை எனும் தொடர் என்னுள் எழுப்பிய ஆர்வத்தினால் இந்த வரகரிசி,சாமை அரிசியை தேடிச்சென்று கண்டுபிடித்தபோது விலையை கேட்டு மயக்கமே வந்தது.ஒரு கிலோ 90 ரூபாயாம்.

சோறு தின்பவன் சொத்தை,கூழ் குடிப்பவன் குண்டு என கிராமங்களில் சொல்வார்கள்.

இந்த நெல்லரிசி சோற்றை மட்டுமே பிரதான உணவாக உண்டா இந்த தமிழன் பண்டைய காலத்தில் வலுவோடு விளங்கினான்?

நெல்லரிசி சோற்றை மட்டுமே உண்டு சர்க்கரை நோய்,இதய நோய் என நோய்களில் முதலிடத்தில் இருக்கும் தமிழன் அந்தக்காலத்திலும் இதைத்தான் உணவுப்பழக்கமாக கொண்டிருந்தானா?

தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஒருவன் இமயவரம்பன் என பெயர்பெற்றானே, இன்னொருவன் கங்கைகொண்டான் என பெருமை அடைந்தானே,இன்னொருவன் தென் திசை நாடுகளை எல்லாம் வென்று கடாரம் கொண்டான் என புகழ் பெற்றானே, அந்த மன்னர்களின் காலங்களில் எல்லாம் நெல்லரிசிதான் பிரதான உணவாக இருந்ததா என்று ஆராய்ந்து பார்த்தால் நிச்சயம் இல்லை.

நெல்லரிசியும் ஒரு உணவாக இருந்ததே தவிர அதுவே முழு உணவு இல்லை.

சோள அரிசி (செஞ்சோளம், வெள்ள சோளம்) கம்பு அரிசி கேழ்வரகரிசி திணை அரிசி சாமை அரிசி வரகரிசி பனி வரகரிசி குதிரைவாலி அரிசி இவற்றுக்கு இடையே நெல்லரிசி சோறும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இன்று நாம் அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தும் கோதுமையை விட பல வழிகளில் உயர்ந்தவை இந்த சிறு தானியங்கள்.கோதுமையை விட இவற்றில் 10 சதவிகிதம் சர்க்கரைச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ இவை எல்லாம் நம் பயன்பாட்டில் இருந்து மறைந்து போய் விட்டன.அரிசிக்கு மாற்றாக கோதுமையை நாடுகிறோம்.

விளைவு,முன்பு பரவலாக எல்லாப்பகுதிகளிலும் பயிரிடப்பட்ட இந்த சிறுதானியங்கள் இன்று பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து விட்டது.

இன்று இந்த சிறுதானியங்கள் குறித்து ஏற்பட்ட விழிப்புணர்வால் இதை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.ஆனால் விலை எங்கோ போய் விட்டது.

ஒருகாலத்தில் நெல்லரிசி பயன்படுத்த முடியாத ஏழை,எளியவர்களின் உணவாக இருந்த இந்த சிறு தானியங்கள் இன்று வசதிபடைத்தவர்களின் உணவாக மாறி விட்டது.

எப்படியோ இதை பாண்டிச்சேரியில் தேடிக்கண்டுபிடித்தேன்,எல்லாவற்றிலும் தலா 5 கிலோ வாங்கி வந்து 10 நாட்களாக இவைகளையே பயன்படுத்தி வருகிறேன்.ஒரு வேளை மட்டுமே நெல் அரிசி உணவை எடுத்துக்கொள்கிறேன்.இந்த புதிய உணவுபழக்கத்தில் நல்லதொரு உடல்,மன திருப்தியையும் உணர்ந்திருக்கிறேன்.

நம் மண்ணுக்கே உரித்தான இந்த தானியங்களை மட்டுமா நாம் தொலைத்தோம்? கூடவே நம் இனத்தின் ஆரோக்கியத்தையும்தானே?

அருமையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த சிறு தானியங்கள் இருக்கும்போது,வெளி நாட்டு மக்காச்சோள சிப்ஸூம்,ஓட்ஸூம் எதற்கு?

நம் பாரம்பரிய உணவுமுறைக்கு திரும்புவோம்,உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுவோம்.அதுமட்டுமல்ல மீண்டும் இந்த சிறுதானியங்கள் பயிரிடும் ஆர்வம் விவசாயிகளுக்கு அதிகரிக்கும்,அதிகரித்தால் அது எல்லோருக்கும் விலை குறைவாக கிடைத்திடும் அல்லவா?

சிறுதானியங்களை இனி அடிக்கடி பயன்படுத்திட முனைந்திடுவோமா?