Friday 2 November 2012

சின்மயி

பாடகி சின்மயி மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு,இட ஒதுக்கீடு குறித்தெல்லாம் தவறாக பேசினார் என்றெல்லாம் கூறுகிறார்கள்,உண்மை எதுவென்று தெரியவில்லை.

ஆனால் அவ்வாறு பேசியதாகக்கூறப்படும் சின்மயி மீது தாக்குதல் தொடுத்ததாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.காரணம் அவர்கள் கையாண்ட அநாகரிக வார்த்தைகள் மற்றும் அவர் குடும்பத்தின் மீதான தாக்குதல்கள்.

மக்களின் உணர்வுகளைத்தூண்டக்கூடிய இருபெரும் பிரச்சினைகள் கு
றித்து அவர் பேசியிருந்தாலும் அவை இன்று எடுபடவில்லை,காரணம் அவர் மீது தொடுக்கப்பட்ட கடுமையான வார்த்தைகள்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துக்கு பதில் கருத்துக்களை நாகரிகமான வார்த்தைகள் கொண்டு ஆதாரப்பூர்வமாக பதியும் போக்கு குறைவாகவே காணப்படுகிறது,எதற்கெடுத்தாலும்அடேய்,வாடா,போடா போன்ற த்தா...ம்மா போன்ற வசவுகள்தான் சகஜமாக காணப்படுகின்றன.

நாகரிகமான விவாதங்கள் மூலமாகவே எதிராளியை திணறடிக்க முடியும் என்பதை பலரும் உணருவதில்லை.

இன்று சின்மயியின் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் நாகரிகமான முறையில் வாதங்களை எடுத்து வைத்திருந்தார்களேயானால் சின்மயிக்கே பெரும் சிக்கல்களை சட்டரீதியாக உருவாக்கியிருக்க முடியும்.ஆனால் அவர்கள் வார்த்தைகளை கையாண்டவிதம் அவர்களை இக்கட்டான நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.

இனிமேலாவது விவாதங்களில் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை தவிர்த்து ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்ள முயலுங்கள்.

வாகன ஓட்டிக்கு ஹெல்மெட் எப்படி முக்கியமோ அதுபோல் சமூக வலைத்தளங்களில் எழுதுவோருக்கு நாகரிகமான வார்த்தைகள் முக்கியம்,பிரச்சினைகள் எழுந்தால் அவை தக்க பாதுகாப்பு கவசமாக அமைந்திடும்.

No comments:

Post a Comment