Friday 2 November 2012

திருஷ்டிப்பூசணியா அல்லது புஷ்டிப்பூசணியா?

லட்சக்கணக்கான பூசணிக்காய்களை ரோட்டில் போட்டு உடைச்சு முடிச்சாச்சா? எத்தனை பேர் கை கால் உடைஞ்சதோ,எத்தனை பேருக்கு உயிர் போச்சோ?

உலகத்திலேயே மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காயின் அருமை பெருமைகள் தெரியாமல் அதன் மருத்துவ குணங்கள் தெரியாமல் மூட ந
ம்பிக்கையின் பெயரால் ரோட்டில் போட்டும் உடைக்கும் மக்கள் இந்த நாட்டைத்தவிர வேறு எங்கும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

என்னது வெண்பூசணியை சாப்பிடுவாங்களான்னு ஒரு கேள்வி வேற.

நீரிழிவு நோய்,சிறு நீரகக்கொளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள்,உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்கள்,மாதவிடாய்க்கொளாறுகளுக்கு சிறந்த தீர்வு கொடுக்கக்கூடியது இந்த வெண்பூசணி.

இந்த வெண்பூசணியில் இருந்து தயாரிக்கப்படும் வெண்பூசணி லேகியம் இரத்தசோகை,ஊளைச்சதை குறைப்பு,எலும்புருக்கி நோய்,வெள்ளைப்படுதல்,உடல் பலம்,தாது விருத்தி,ஆகியவற்றுக்கு சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதன் அருமை தெரியாமல் யாரோ சொன்னாங்கன்னு ரோட்டில் போட்டு உடைக்கிறோம்.

ஆனால் இதை ரோட்டில் போட்டு உடைக்கும் பழக்கத்தை நமக்கு கத்துக்கொடுத்தவங்க வீட்டில் அடிக்கடி சமைக்கப்படும் பதார்த்தம் இது, இது சீசன் இல்லாத போது பயன்படுத்த இதை வற்றல் வேறு செய்து பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நாம திருஷ்டி சுத்தி ரோட்டில் போட்டு உடைக்கிறோம்.அவங்க விபரமாகவே இருக்காங்க,அதனால் சட்டியில் போட்டு சமைக்கிறாங்க.

ஒற்றை வரியில் சொல்லணும்னா, நமக்கு திருஷ்டிப்பூசணி,அவாளுக்கு உடலுக்கு வலுதரும் புஷ்டிப்பூசணி.

இனியாவது வாரத்துக்கு ரெண்டு முறை வெண்பூசணியை சமைச்சு சாப்பிடுங்க.அடிக்கடி அதில் ஜூஸ் போட்டு குடித்து வாருங்கள்.அனுபவித்த பிறகு தெரியும் அதன் அருமை.

No comments:

Post a Comment