Friday 2 November 2012

கண்ணகி - அடிமைச்சின்னம்

சென்னை கடற்கரை சாலையில் போகும்போதெல்லாம் இந்த சிலையை காணும்போது இவள் மாதர்குல திலகமா அல்லது ஆணாதிக்க சமுதாயத்தின் அடிமைச்சின்னமா என்ற கேள்விதான் எழுகிறது.

கணவன் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கொல்லப்பட்டான் என்றவுடன் பொங்கியெழுந்து தன் காலில
் இருந்த சிலம்பை உடைத்து மன்னரின் நெஞ்சுக்கு நீதி சொல்லி மன்னரையும்,மகாராணியையும் வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல் மதுரை மாநகரத்தையே தீக்கிரையாக்கிய துணிச்சல் கொண்ட ஒரு பெண் தன் கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்திக்கொண்டிருந்தபோதும் கணவனையே மனதால் தொழுது கொண்டிருந்தாள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவா இருக்கிறது?

கோவலன் வேறொரு பெண்ணிடம் வீழ்ந்து விட்டான் என்று அறிந்தவுடன் அவனை பொளேரென்று ஒரு அறை விட்டு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருந்தால் கோவலன் கள்வன் என்று கொல்லப்பட்டிருக்க மாட்டான் அல்லவா?செங்கோல் தவறாத மன்னரும்,மகாராணியும்,மதுரை மாநகரும் பிழைத்திருக்கும் அல்லவா?இது போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் பெண்கள் அனைவரும் ஆணுக்கு அடங்கி வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டிருக்குமோ?

No comments:

Post a Comment