Tuesday 8 January 2013

நம் பக்கத்து வீட்டில் ஒருவர் இருக்கிறார்,அவர் ஒரு சாமான்யர் என்று நினைத்து பட்டும் படாமல் இருக்கிறோம், ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி,அதில் நம் பக்கத்து வீட்டுக்காரர் பேசுகிறார், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நம் பக்கத்து வீட்டுமனிதரின் அருமை,பெருமைகளை பட்டியலிடுகிறார்.

பிரமித்துப்போகிறோம், அடடே இவ்வளவு பெரிய மனிதர் பக்கத்து வீட்டில் இருந்தும் அவரைப்பற்றி தெரியவில்லையே,பழகாமல் விட்டு விட்டோமே என்று.

அந்த பட்டும் படாமல் பழகிய பக்கத்து வீட்டு மனிதர் போலத்தான் நாம் ரசத்தில் இருந்து தூக்கி எறியும் கொத்தமல்லி,அதன் பெருமைகளை பார்ப்போமா?

இலை,விதை இரண்டும் மருத்துவ குணம் நிறைந்தவை.தினந்தோறும் கொத்தமல்லித்தழையை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் இரத்தம் சுத்தமடையும்,இரத்தக்குழாய்களில் படிந்துள்ள நச்சுக்கழிவுகள் காணாமல் போகும்.முக்கியமாக மதுவுக்கு அடிமையானவர்கள் மதுவின் மோகத்திலிருந்து விடுபடுவர்.

மேலும் தலைசுற்றல், நெஞ்செரிச்சல்,சுவையின்மை,பசியின்மை,உடல்களைப்பு நீங்கிடும்,ஆழ்ந்த தூக்கம் வரும்,மன அமைதி கிடைக்கும்,எப்போதும் ஒரு வித பதற்ற நிலை,அச்சவுணர்வுடன் இருப்பவர்கள் தெளிவு பெறுவார்கள். சிறுநீரை பெருக்கும்,வாய்வு கோளாறுகளை நீக்கும்.

கொத்தமல்லி விதையுடன் சீரகம்,அதிமதுரம்,கிராம்பு,சதகுப்பை,லவங்கம்,கருஞ்சீரகம் பனங்கற்கண்டு ஆகியவற்றை கலந்து பொடி செய்து காலை,மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர காய்ச்சல்,ஜன்னி, மார்பு வலி, வாந்தி,தொடர் விக்கல்,வாழ்குழறல்,வலிப்பு ஆகியவை பறந்து போகும்.

உடல்வலி, களைப்பு ஆகியவை பறந்து போய் நல்ல உறக்கம் வரும்,மனதிற்கு தெளிவு கிடைக்கும்.

கொத்தமல்லியை தினந்தோறும் கணிசமான அளவு எடுத்துக்கொண்டால் கண்கள் குளிர்ச்சி பெறும்,பார்வைத்திறன் கூடும்,தலை வலி, தலை பாரம் ஆகியன தீரும்.

அஞ்சு ரூபாய் மேட்டர்,எவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கு பாருங்க, கொத்தமல்லியை இனி நாள்தோறும் பயன்படுத்த ஆரம்பித்து உடல் மற்றும் உள்ளத்தின் நலன் காப்போமா?.

No comments:

Post a Comment