Tuesday 8 January 2013

கறிமுள்ளி


நம்மில் பலரும் கறிமுள்ளி எனும் செடியை கண்டங்கத்தரி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஃபேஸ்புக்கிலும் அவ்வாறே பலரும் பதிவுகள் இடுகின்றனர்.உண்மையில் கண்டங்கத்தரி வேறு,கறிமுள்ளி வேறு. முதல் படம் கறிமுள்ளி, இரண்டாவது படமே கண்டங்கத்தரி.

கறிமுள்ளி : இது தானகவே வளர்கிறது. முள் நிறைந்த இலைகள், நீலநிறப் பூக்கள்,வெள்ளை நிறத்தில் வரிகளுடன் மஞ்சள் நிறத்தில் பழங்கள் கொண்டது.

இந்த தாவரம் முழுவதும் மருத்துவப்பயன்கள் நிறைந்தது.சதை நரம்புகளை சுருங்கச்செய்தல்,காமம் அதிகரித்தல் ஆகிய குணங்கள் பெற்றது. வேர் கோழையகற்றி,சிறுநீர்,வியர்வை ஆகியவற்றை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

முழுத்தாவரத்தையும் உலர்த்தி சூரணம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட இருமல், இறைப்பு,ஈளை,கோழை ஆகிய பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

இதன் சமூலத்தை குடி நீரில் காய்ச்சி குடித்து வர சுரம்,இருமல் ஆகியவை ஓடிப்போகும்.

பல்வலி,பல் சொத்தை,போன்றவற்றிற்கு கிராமப்புறங்களில் இதன் விதையை பீடிபோல் சுருட்டி புகை பிடித்து வரும் வழக்கம் உண்டு.

No comments:

Post a Comment