Wednesday 30 January 2013

கம்பு வாங்கி அதை மிக்ஸியில் போட்டு இரண்டாக உடைத்து அடுப்பில் அரிசிக்கு உலை வைப்பது போல உலை வைத்து தண்ணீர் கொதி வந்தவுடன் இந்த கம்பரிசியை விட வேண்டும்.இது அரிசியை விட வேக சிறிது நேரம் பிடிக்கும்.கூழ் போன்ற பதத்தில் வந்தவுடன் இறக்கினால் கம்பஞ்சோறு தயார்.

தயிர்,மோர் ஏதேனும் கலந்து எலுமிச்சை, நாரத்தை போன்ற ஊறுகாய்கள் தொட்டுக்கொள்ள சுவை சூப்பர்.

நாட்டுமீன்வகைகளான,கெளுத்தி,குரவை,வெரால்,அயிரை,உளுவை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை குழம்பு வைத்து கம்பரிசி சோறுடன் சாப்பிட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சுவை சூப்பரோ சூப்பர். நாட்டு மீன்களை தேடிச்செல்ல முடியாத இந்தக்காலத்தில் கடல் மீன்களை நாடலாம்.

கம்பு போன்ற சிறுதானியங்கள் உடலுக்கு வலுவைத்தரும், சிறு நீர்ப்பெருக்கும், இரத்தம் சுத்தமாகும், கண் பார்வைக்கு நல்லது,அசீரணக் கோளாறுகள் உள்ளவர்கள் அடிக்கடி கம்பு உள்ளிட்ட சிறு தானிய உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

No comments:

Post a Comment