Tuesday 8 January 2013

வெண்புள்ளி

என் அருமை நண்பர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், சமூக நலனில் அக்கறை கொண்ட, மனித நேயம் மிகுந்த என் நண்பர்கள் இந்த பதிவினை பகிர்ந்து பலருக்கும் இந்த செய்தியை கொண்டு செல்ல உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உடலில் வெண்புள்ளி எனப்படும் நிறக்குறைபாட்டினை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெண்குஷ்டம் என அழைத்து வந்தனர்.ஆனால் அதற்கும் குஷ்டம் எனும் நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே.

இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை அடைகின்றனர். இவர்கள் படித்து எவ்வளவு நல்ல நிலைக்கு உயர்ந்தாலும் திருமணம் என்று வரும்போது பல இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர். இவர்கள் மற்றவர்களைப்போன்றே முழு உடல் ஆரோக்கியம் உடையவர்கள் எனும் தெளிவு நம் மக்களிடையே போதுமானதாக இல்லை என்பதே காரணம்.

திருமண விஷயத்தில் இவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைக் களைய வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தினரால் ஒரு சுயம்வரம் நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 27-ம் நாள் திருச்சி நேஷனல் கல்லூரில் நடைபெற இருக்கிறது.

நமக்கு தெரிந்தவர்களுக்கு,அறிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு,உறவினர்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்,அவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வோமே.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு,

வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா,

எண்.6 காமாட்சிராவ் தெரு,பட்டேல் நகர்.

மேற்கு தாம்பரம்,சென்னை-600045.

தொலைபேசி : 044- 22265507, 65381157.

மின் அஞ்சல் : leucodermafree@yahoo.in

website. www.lam-india.org.

குறிப்பு : இந்த குறைபாடு உடையவர்களுக்கு மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (defence research and development organisation DRDO) மருந்தினை கண்டுபிடித்துள்ளது.இந்த மருந்தினை 300 முதல் 400 நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்,இது குறித்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியிலும் ஃபோனிலும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment