Tuesday 8 January 2013

நீல சாயம் வெளுத்தது, ராஜா வேஷம் கலைந்தது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீக்கவேண்டும் என்று கேட்கிறார்களே! அடிப்படைக்காரணத்தை அவர்கள் வாயாலேயே உளறிக்கொட்டியிருக்கிறார்கள். தலித்துகள் அவர்கள் வயலில் வேலைக்கு வருவதில்லையாம்,அதனால் இலவசங்களை நீக்க வேண்டுமாம்,ஒரு கொங்கு சாதீய பெருச்சாளி தொலைக்காட்சி நேர்காணலில் உளறியிருக்கிறது.

இன்னும் இப்படியெல்லாம் கூட கேட்பார்கள்,தலித்துகளுக்கு கல்வி கற்கும் உரிமையைமறுக்க வேண்டும். வீட்டு வேலைக்கு வருவதில்லை,வயல் வேலைக்கு வருவதில்லை,மலம் அள்ளவும்,கழிப்பறை சுத்தம் செய்யவும் வருவதில்லை,குப்பைகளை அகற்ற ஆள் இல்லை,பிணம் புதைக்கவும்,எரிக்கவும் ஆள் இல்லை,எனவே தலித்துகளுக்கு கல்வி மறுக்கப்பட வேண்டும். இதெல்லாம் உங்கள் தொழில்தானடா, ஏண்டா வர மாட்டேங்கறீங்க என்று கேட்டால் எங்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாய்கிறது,எனவே வன்கொடுமை தடுப்புச்சட்டத்தையும் நீக்க வேண்டும் என்றெல்லாம் கூட கேட்பார்கள்.

இலவசம் என்பது இங்கே சாதி பார்த்தா வழங்கப்படுகிறது? எல்லோரும்தான் பயனாளிகளாக இருக்கிறார்கள்,இதைக்கூட உண்ராத அறிவு ஜீவிக்களை நேர்காணலுக்கு அழைக்கிறார்களே இவர்களை சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment