Wednesday 30 January 2013

கருணை


அல்லா மீது ஆணையாக கூறுகிறேன், நான் தவறு செய்யவில்லை என்று கூறியும் 17 வயதில் சிறையில் அடைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு தலையை வெட்டி சாய்க்கப்பட்ட ஒரு சகோதரி ரிசானா விஷயத்தில் கூற்ப்படும் ஒரு விஷயம், அந்த குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை எனபது.இந்த விஷயத்தில் சவுதி மன்னர் நினைத்திருந்தால் ராஜ மன்னிப்பு வழங்கியிருக்கலாம்.வழங்கியிருப்பார் ரிசானா அமெரிக்க,ஐரோப்பிய தேசத்தவராக இருந்திருந்தால்.

இந்த சம்பவத்தை நினைக்கும் போது கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் எனும் பெண்மனியின் தியாகம்,பெருந்தன்மை,மன்னிக்கும் குணம் கண் முன்னால் வருவதை தவிர்க்க முடியவில்லை.

தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய குடும்பத்துடன் ஒரிசாவில் பழங்குடியின மக்களிடையே தங்கி சேவை புரிந்து வந்தவர் பாதிரியார் ஸ்டேன்ஸ்.அவர் பாதிரியார் என்பதை விட சிறந்த சமூக சேவகர் என்பதே சரி.அவர் மதமாற்றம் செய்வதாக கூறி ஒரு கொடிய கும்பல் அவர் இருப்பிடத்தை நோக்கி வந்தது.

35 வயதான ரபீந்திர குமார் பால் எனும் தாரா சிங் தலைமையிலான குழு 1999ம் ஆண்டு சனவரி மாதம் 22ம் தேதி நள்ளிரவு பாதிரியாரும்,அவர் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 58 வயதான ஸ்டெய்ன்ஸ், அவர் மகன்கள் 10வயது பிலிப், 7 வயது திமோத்தி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இத்தனை பெரிய துயரையும் தாங்கிக் கொண்டு, கணவனையும் இரு குழந்தைகளையும் கொன்றவர்களை தான் மன்னிப்பதாக அறிவித்தார் கிளாடிஸ். 'மன்னிப்பில் கசப்புணர்வுகள் இல்லை. கசப்புணர்வுகள் இல்லையெனில் அங்கு நம்பிக்கை இருக்கும்' என்று கூறி மன்னிப்பின் மகத்துவத்தை செயலில் காட்டியவர் கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ். மன்னிப்பதாக இவர் வெளிப்படையாக அறிவித்திருந்த போதிலும், சட்டம் தன் பாதையில் சென்று ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தாரா சிங்கின் ஆயுள் தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிச் செய்துள்ளது.

'மன்னிப்பில் கசப்புணர்வுகள் இல்லை. கசப்புணர்வுகள் இல்லையெனில் அங்கு நம்பிக்கை இருக்கும்' என்று கூறி மன்னிப்பின் மகத்துவத்தை செயலில் காட்டியவர் கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ்.

இந்த பெருந்தன்மை எங்கே,சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் கழித்தும் ரிசானாவின் மரணத்தை வேண்டி விரும்பி நின்ற சிறுபுத்தி எங்கே? அங்கே மனிதம் செத்து விட்டது.
 

No comments:

Post a Comment