Wednesday 30 January 2013


1. பென்னி குவிக் இங்கிலாந்தில் இருக்கும் தன் சொத்துக்களை விற்று அந்த பணத்தில் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.

2.டாக்டர்.அம்பேத்கர் மேல்படிப்பு படிக்க பரோடா மன்னர் உதவி செய்தார்.

3. என் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் நாங்கள் எல்லோரும் அண்ணா என்று அன்போடு அழைக்கும் தலித் சமுதாயத்தை சார்ந்த பாலசுந்தரம் என்பவர் நான் படிப்பதற்கு உதவி செய்தார், மேற்படிப்புக்கு சென்னைக்கு செல்ல அந்த கல்வி நிறுவனத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பினார்.

- கல்கி இதழில் டாக்டர்.ராமதாஸ்.

இந்த மூன்று செய்திகளும் உணர்த்துவது என்ன? ஏழை எளியவர்கள், வறுமையில் துன்புறுவோர் எல்லாத் தரப்பிலும் இருப்பர்.அவர்களுக்கு சாதி,மதம், நிறம்,இனம் பாராது உதவி செய்தலே மனித குணத்துக்கு சிறப்பு சேர்க்கும்.தன்னிடம் இருக்கும் பொருளினால் நலிவுற்றவர்களின் நலனை பேணிக் காத்திடுவோரே மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பர்.

அதை விடுத்து நான் ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசுவதும், நீ அடிமை பரம்பரை என்று இழித்தும் பழித்தும் பேசுவது மனித நேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் சிறிதும் பொருந்தாத ஈனச்செயல்.

இதைத்தான் வள்ளுவன் கூட தன்னிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈயாதவனின் பணமானது ஊருக்கு நடுவே கவர்ச்சியான பழங்களை தாங்கி நிற்கும் ஒரு விஷ மரம் போன்றது என்கிறார். அந்தக் குறள்.

நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்

நச்சு மரம் பழுத்தற்று.
 

No comments:

Post a Comment