Tuesday 8 January 2013


அதற்கு கொதித்தாயா,இதற்கு கொதித்தாயா என கேட்பதால் சொல்லுகிறேன், எங்களுக்கு அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அன்பான,கனிவான பணிவான வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன்.

எம் தலைவன்,என் கட்சி, என் கட்சி தொலைக்காட்சி என்று ஒரே சிந்தனையில் மூழ்கிக்கிடக்காமல்தினந்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை படித்திடுங்கள், முடிந்த அளவுக்கு எத்தனை தினசரி, வார இதழ்கள், பருவ இதழ்கள் படிக்க முடியுமோ படியுங்கள், பல்வேறு தொலைக்காட்சி செய்திகளை பார்த்திடுங்கள், அப்போது தானாகவே ஒரு செய்தியின் உண்மைதன்மை புரியும்,புரிந்து கொள்ளும் பக்குவமும் திறனும் நமக்கு வந்து விடும்.முக்கியமாக ஆட்டு மந்தை புத்தி நம்மை விட்டு அகலும்.

இத்தகு திறன் கொண்ட மக்கள் சமூகத்தில் பெருகிடுவார்களேயானால் எந்தத்தலைவனுக்கும் தன் மக்களை ஏமாற்றும் எண்ணம் துளியும் வராது.தலைவனுக்கு மட்டுமல்ல,ஆள்பவர்கள்,பத்திரிக்கைகள் என அனைவருக்குமே மக்கள் மீது ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கும், எவரும் மக்களை ஏமாற்ற துணிய மாட்டார்கள்.துணிபவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.

அப்படி ஒரு அறிவார்ந்த சமூகமாக நம் சமூகம் மாறி விட்டால் இதற்கு கொதித்தாயா,அதற்கு கொதித்தாயா என்ற கேள்விக்கே இடம் இருக்காது.கொதிக்கத்தூண்டும் சம்பவங்களும் நடக்காது.
 

No comments:

Post a Comment