Tuesday 8 January 2013

தேற்றான் கொட்டை

தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும் நீரை தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று வழங்கப்படுகிறது.உடனே தம்பி இராம்குமார் சண்முகம் இராமையா !அமுக்கரான்னா என்ன அமுக்கரா அமுக்கரான்னு சொல்லுமான்னு ஒரு குதர்க்கமாக கேள்வி கேட்டுடாதேள்.

தமிழகத்தில் மலைக்காடுகளில் விளைகிறது.இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி உணவின் மீது ஆர்வத்தை அதிகரிக்கும். இதன் பழச்சதை சீதபேதியை கட்டுப்படுத்தும்,இந்த பழச்சதையை காயவைத்து பயன்படுத்தலாம்.

இதன் விதையை ஊறவைத்து பசைபோல அரைத்து தடவிவர வீக்கம் குறையும். ( இராமையா கவனிக்க )

இதன் விதைப்பொடியை காலை,மாலை இரு வேளை தண்ணீரில் கலந்து குடித்து வர கெட்டியாகி தொல்லை கொடுக்கும் மார்புச்சளி இளகி வெளியே வர துவங்கும்.

உடல் இளைப்பு நீங்கி வலு பெறும். மோரில் கலந்து சாப்பிடும்போது நாள்பட்ட பேதி நிற்கும்.மேலும் இது வெள்ளைப்படுதல், மதுமேகம், சிறுநீர்க்கடுப்பு,எரிச்சல், மூல நோய் போன்றவற்றையும் தீர்க்கும் ஆற்றல் பெற்றது.

No comments:

Post a Comment