Wednesday 30 January 2013

இங்கே நான் மகர் சாதியினன் இல்லை, இவன் என்ன சாதிக்காரனாக இருப்பானோ என்று எவரும் என்னை சந்தேகம் கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் எழவில்லை. 

நான் செல்லக்கூடாத தெரு என்று எதுவும் இல்லை.

காலில் மிதியடி போட்டுக் கொண்டு நடக்கக்கூடாது என்று எவரும் எனக்கு உத்தரவு போடவில்லை.

எவரைக் கண்டும் ஒதுங்கி நிற்க வேண்டிய தேவை இல்லை, என் கைகளை வேகமாக வீசி நடக்கிறேன்.

எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறேன்.

ஒரே அறையில் வசிக்கிறேன்,ஒரே பாத்திரத்தில் தண்ணீர் அருந்துகிறோம், சக மனிதனை விலங்கினும் கீழாக நடத்தும் அவலமில்லை,பரிபூரண சுதந்திரத்தை உணர்கிறேன்.

என் தாய் மண்ணில் இல்லாத சுதந்திரத்தை அனுபவிக்கிறேன்,அந்த ஏக்கம் மட்டும் என் மனதை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

-1913 ல் நியூயார்க் மண்ணில் கால் பதித்த பிறகு அண்ணல் அம்பேத்கரின் அனுபவங்கள்.

No comments:

Post a Comment