Wednesday 30 January 2013

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையாக இருக்கின்ற உச்ச நீதிமன்ற வழக்கு குறித்து சில நாட்களாக பத்திரிக்கைகள்,சமூக இணைய தளங்களில் செய்திகள் வருகின்ற நிலையில் இது குறித்து அன்றே அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்து இதோ...

இந்துக்களிடையே அர்ச்சகர்கள் ஒழிக்கப்படுவது நலம்.ஆனால் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.எனவே , அர்ச்சகத் தொழில் பரம்பரைத் தொழிலாக இருப்பதையாவது ஒழிக்க வேண்டும்.

இந்து மதத்தவன் என்று தன்னை சொல்கிற எந்த சாதியைச் சார்ந்தவராயினும்-அவருக்கு அர்ச்சகர் ஆகும் உரிமை இருக்க வேண்டும்.அர்ச்சகர் தொழிலுக்கான அரசுத் தேர்வு எழுதி சான்றிதழ் பெறாத எவரும் அர்ச்சகர் தொழில் செய்யக்கூடாது என்று சட்டமியற்ற வேண்டும்.

- அம்பேத்கர்

No comments:

Post a Comment