Tuesday 8 January 2013

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் என்னிடம் சொன்னாள், கடையில் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வரும்போது அவளை நோக்கி நாலைந்து இளைஞர்கள் கேலி செய்திருக்கிறார்கள். முடியைப் பார், நடையைப் பார்,எங்களுக்கு பஜ்ஜி என்றெல்லாம்.

இது என் கவனத்துக்கு வந்த உடன் நான் அந்த பெண்ணிடம் சொன்னேன்.முதலில் தைரியத்தை வளர்த்துக் கொள்,அங்கேயே சத்தமாக எல்லோரும் பார்க்கும்படியாக எதிர்த்து பேசு,. சும்மா ஒரு ஸ்டண்ட்டு அடி இதோ ஒரு ரூபா காய்ன் ஃபோனில் டிஎஸ்பி ஆஃபிசுக்கு ஃபோன் பண்ணி சொல்றேன் என்று.சரி என்று சொன்னாள்.

ஓரிரு நாட்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் ஓடி வந்து கெஞ்சினார்களாம் அந்த இளைஞர்கள்.இனிமேல் கேலி செய்ய மாட்டோம் என்று. அங்கிருப்பவர்களும் கவனம் திரும்பி அவர்களை திட்டி அனுப்பி இருக்கிறார்கள்.

நம்முடைய பெண்களில் பெரும்பாலானோர்க்கு தைரியம் குறைவாக இருக்கிறது, சூழ்நிலைகளைகளை எப்படி சாதுர்யமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற பயிற்சி இல்லாமல் இருக்கிறார்கள்.

காரணம் பெண் என்றால் மண்ணைப் பார்த்து நடக்க வேண்டியவள் போன்று அவளுக்கு நம் சமூகம் காலம் காலமாக பயிற்றுவித்திருக்கும் கட்டுப்பாடுகளே.

No comments:

Post a Comment