Tuesday 8 January 2013


பெண்ணே நீ போற்றத்தகுந்தவள் , நீ தெய்வத்துக்கு சமமானவள் என்று உன்னை மற்றவர்களால் நீ பொய்யுரைகளால் புகழப்பட்டுக்கொண்டிருந்தவரை உனக்கு கிடைத்த வெகுமதிகள்தான் என்ன?

ஆணாதிக்கவாதிகளால் அடக்கி வைக்கப்பட்டாய்.

பால்யவிவாகம் எனும் அடக்குமுறை உன் மீது நிகழ்ந்தது.

இளம் விதவை எனும் பட்டம் கிடைத்து பூவை இழந்தாய்,பொட்டை இழந்தாய், வெள்ளைப்புடவையே உன் சீருடை ஆனது.

குடிகாரக்கணவன் இறந்தபோதும் உடன்கட்டை ஏறுதல் எனும் சதியில் நீ சதிமாதாவாக பலியிடப்பட்டாய்.ஆனால் நீ இறந்தால் உன் கணவனுக்கு மறுமணம்.

தேவர்களுக்கு தாசியென தேவதாசியாகி சீரழிக்கப்பட்டாய்.

குடும்பத்தின் எல்லாத்துயரங்களுக்கும் உன் மீதே பழி சுமத்தப்பட்டது.

நீ விழித்துவிடாத வகையில் தெய்வத்திற்கு ஒப்பானவள் என ஒரு பட்டம்.

பெண்ணே இவையெல்லாம் பொய்யுரைகள்,உன்னை மயக்கும் வார்த்தைகள்,உன்னை அடிமைப்படுத்தும் தந்திரங்கள். பொறுத்தது போதும் பொங்கி எழு.

கல்வி பயிலாத பெண்ணொருவள் களர் நிலம் போன்றவள், எனவே கல்வி கற்க வா என சான்றோர்கள் அறிவுத்தியதால் நீ கல்வி கற்கத்துவங்கிய பின்புதானே உனக்கு சமூகத்தில் உண்மையான விடுதலை கிடைத்தது.

மூடர்கள் மதத்தின் பெயரால் ஆயிரம் சொல்லுவார்கள், இவைகளை காலில் போட்டு மிதித்து மாதர்தமை இழிவு செய்யும் மடமைதனை கொளுத்துவோம் என சூளுரைப்பதில்தான் பூரணமான பெண் விடுதலை இருக்கிறது.
 

No comments:

Post a Comment