இந்த படத்தில் இருக்கும் இருவரும் ஒன்றே.பெயர் சோனாலி முகர்ஜி.ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்தவர்.
என்றைக்கு ஒரு பெண் உடல் முழுவதும் நகைகள் அணிந்து நள்ளிரவில் அச்சமின்றி செல்லும் நிலை இந்நாட்டில் உருவாகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததா

க அர்த்தம் என்று காந்தியடிகள் சொன்னார்.
ஆனால் இந்த பெண்ணுக்கு அநீதி வீதியில் நடக்கவில்லை,தன் வீட்டு மாடியில் இரவு உறங்கிக்கொண்டிருந்த போது நடந்தது.மூன்று கயவர்களால்,மிருகங்களால் முகத்தில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டாள்.
இவள் பாருக்கு சென்றாளா?பப்புக்கு சென்றாளா?பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டாளா என்றால் இல்லை.சராசரி பெண்ணாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தவளை மூன்று மிருகங்கள் பின் தொடர்ந்து கேலி செய்தபோது,காவல்துறையில் புகார்செய்வேன் என்று எச்சரித்த காரணத்துக்காகவே அவள் முகத்தின் அழகு அந்த கொடியவர்களால் அமிலம் ஊற்றி சிதைக்கப்பட்டது.
இவளுக்கு இந்த கொடுமையை செய்த கொடியவர்களில் ஒருவன் இளம் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டான்,மற்ற இருவரும் பெயிலில் வந்து சுதந்திரமாக வந்து உலவிக்கொண்டு அச்சுறுத்தியதன் விளைவாக இவள் வேறு ஊருக்கு குடிபெயர்ந்து வாழவேண்டியதாயிற்று.
கொடியவர்கள் தப்பித்து விட்டார்கள்,ஆனால் இவளின் நிலை? சம்பவம் நடந்து 9 ஆண்டுகளாகிறது.இரு விழிகளிலும் பார்வையை இழந்து விட்டாள்.வலது காதின் செவித்திறனை இழந்து விட்டாள்.மூச்சுத்திணறல்,குறைந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறாள்.இவள் மீண்டும் பார்வையை பெறவேண்டுமானால் விழியின் கார்னியாவை மாற்றவேண்டுமாம்,அதற்கு 17 இலட்சம் செலவாகுமாம்.இது வறுமையின் பிடியில் உள்ள அவளால் முடியாத காரியம்.
பி.ஹெச்டி படிக்கவேண்டும் என்ற இலட்சியத்தோடு வாழ்வைத்துவங்கிய இவள் மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணாடிரத்தை சந்தித்து தன்னைக் கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டிருக்கிறாள்.
பிறந்த நாள் பார்ட்டிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய மத,கலாச்சாரக்காவலர்கள்,கலாச்சாரத்தோடு வாழ்ந்து தேசிய மாணவர்படையில் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த பெண்ணின் வாழ்க்கையை சீர்குலைத்த கயவர்களை என்ன செய்தார்கள்?இந்த விவகாரத்தில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தங்கள் வீரத்தை காட்டுவதுதானே?
இந்த பெண்ணின் நிலையை ஆனந்தவிகடனில் படித்தபோது,மனம் துயருற்றது.இவள் மீண்டும் பார்வையை பெற்று அவள் வாழ்வின் இலட்சியங்களை அடைய பொருளாதாராம் தடையாக இருப்பதை உண்ரமுடிகிறது.சமூக ஆர்வலர்கள் ஆனந்த விகடன் பத்திரிக்கையை தொடர்பு கொண்டு இவளுக்கு உதவ முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
தொலைபேசி எண்கள்: 044 - 28545500, 044 - 28512929
இமெயில்: av@vikatan.com editor@vikatan.com
இவளுக்கு உரிய நீதி கிடைக்கிறதோ இல்லையோ,கன்றை இழந்த பசுவுக்காக தன் மகனையே தேர்க்காலில் இட்டு கொன்ற மனுநீதிச்சோழன் கதையை புத்தம் புது பேப்பர்களில் தொடர்ந்து படித்துக்கொண்டிருப்போம் இந்த பாரதத் திருநாட்டில்.எந்த மேலை நாட்டு கலாச்சாரம் இங்கே இளைஞர்கள் சீரழிப்பதாக கூப்பாடு போடுகிறார்களோ,இந்தியாவை விட அந்த மேலை நாடுகளில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகவே வாழ்கிறார்கள்.அந்த நாடுகளில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு இது போன்று ஒரு நிலை ஏற்பட்டிருக்குமானால் குற்றவாளி தன் வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்கவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கும் என்பதையும் மறந்து விடக்கூடாது.வாழ்க பாரதம்!வளர்க பெண்ணினம்!புண்ணிய பூமியடா!ஆஹா என்னே ஒரு பெருமை!

No comments:
Post a Comment