Monday 6 August 2012

பயண வழி எமன்கள்

குடித்துவிட்டு பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி,போலிஸ் வந்து மீட்டது.- இது செய்தி.

இது போன்று போதையில் வண்டியை ஓட்டி விபத்துக்குள்ளாக்கும் செய்திகள் அடிக்கடி வரக்காரணம் என்ன? 1.பயண வழி உணவகங்கள் 2.டாஸ்மாக்.

சில ப
யணவழி உணவகங்களை கடக்கும் போது குடலை புரட்டும் அளவுக்கு மூத்திரவாடை வீசும்.அத்தகையை ஓட்டல்களுக்குத்தான் இந்த பேருந்துகள் செல்லும்.அந்த ஓட்டல்களின் கழிப்பறைகள் படுகேவலமாக இருக்கும்,உணவு தயாரிக்கும் இடங்களும் சுகாதாரமற்று இருக்கும்.இந்த உணவகங்களால் நம் வயிற்றுக்கும் உத்தரவாதமில்லை,உயிருக்கும் உத்திரவாதமில்லை.

பின் ஏன் இந்த பேருந்துகள் இது போன்ற ஓட்டல்களுக்கு செல்கின்றன.காரணம் அந்த ஓட்டல்களில் ஓட்டுநர், நடத்துனருக்கு அளிக்கப்படும் தனி கவனிப்பு.சைவ ஓட்டல் என்று பெயர்,ஆனால் தனி அறையில் ஓட்டுநர், நடத்துனருக்கு மீன்,கறி என அசைவம் வழங்கப்படும்,பிற்கு ஒரு குவாட்டர் பாட்டில் வேறு சப்ளை செய்யப்படுகிறதாம்,அவர்கள் குடிப்பழக்கம் இல்லாதவரெனில் பிஸ்கெட்பாக்கெட்,பழங்கள் வழங்கப்படுமாம்.பல நூறு பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடும் இவர்கள் பயணவழி எமன்கள் என்றால் மிகையல்ல.

பேருந்துக்கட்டணம் வாங்கும் அரசாங்கத்துக்கு பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பு இருக்கிறது.ஆங்காங்கே வழியில் வாகனத்தை நிறுத்தி பேருந்து பயணச்சீட்டினை பரிசோதிப்பது போல்,ஒவ்வொரு நகரத்துக்குள்ளும் பேருந்து நுழையும்போதும் தகுந்த உபகரணங்களின் உதவியோடு ஓட்டுநர் குடித்திருக்கிறாரா இல்லையா என்று சோதிக்கப்பட்டு பேருந்தினை இயக்க அனுமதிக்கும் நிலை வருமானால் குடியினால் நிகழும் விபத்துக்களை முற்றிலும் தடுத்துவிடலாம்.

No comments:

Post a Comment