வல்லரசு,வலுவான
நாடு என்றால் எல்லாத்துறைகளிலும் முத்திரை பதிக்க வேண்டும்.அப்போதுதான்
அது வல்லரசு.இது விளையாட்டுத்துறைக்கும் பொருந்தும்.
ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தபோது இந்தியவீரர்களின் உடல்வலிமையை தென்னாப்பிரிக்காவினர்

இரகசியமாக கணித்திருக்கின்றனர்.அதில் முதலிடம் பிடித்தவர் ராபின்சிங் என்ற
தமிழக வீரர்.இதில் வேடிக்கையான விஷயம்,தென்னாப்பிரிக்காவின் கடைசி வீரரின்
உடல் வலிமையைவிட ராபின்சிங் கீழே இருந்தாராம்.அப்படிப்பட்ட
ராபின்சிங்கிற்கு சரியான வாய்ப்பு அளிக்கப்பட்டதா என்றால்
இல்லை.இத்தனைக்கும் அவர் பல இக்கட்டான தருணங்களில் இந்திய அணியை
காப்பாற்றியிருக்கிறார்.
இது அனைத்து விளையாட்டுக்கும் பொருந்தும்.மொழி,இனம்,அழகு,வளைந்து கொடுத்தல்,செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வீரர்கள் பல்வேறு விளையாட்டு அணிகளுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இங்கே சர்வசாதாரணமான ஒன்று. நிலைமை இப்படியிருக்கையில் ஒலிம்பிக்கில் நாம் தங்கப்பதக்கத்தை எதிர்பார்த்து நிற்பது வீணான எதிர்பார்ப்பு.
திறமைக்கு முக்கியத்துவம் அளித்து வீரர்களை தேர்ந்தெடுப்பதால்தான் அமெரிக்கா,சீனா,ரஷ்யா மட்டுமல்லாமல் சிறு நாடுகளும் பதக்கங்களை அள்ளிக்குவிக்கிறார்கள்.
நாம் என்ன செய்வோம்? ஒலிம்பிக் தோல்வியின் ஏமாற்றத்தால் விளையாட்டை ஊக்குவிக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் நமது எம்பிக்கள் குரல் எழுப்புவார்கள்,பத்திரிக்கைகள் தலையங்கள் எழுதும்.மெல்ல மறந்து போவோம். நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒலிம்பிக் வரும், நாமும் மிகுந்த எதிர்பார்ப்போடு தொலைக்காட்சி முன் அமருவோம்,பத்திரிக்கைகளை புரட்டுவோம்.இது வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கும்.

No comments:
Post a Comment