Thursday 16 August 2012

பேச்சுரிமை

எத்தனையோ பிரச்சினைகள் இருந்தும்,எத்தனையோ பற்றாக்குறை இருந்தும்,சாதி,மத,இன வேறுபாடுகள் இருந்தும் நாம் மற்ற உலக நாடுகளில் இருந்து தனித்து தெரிவதற்கு காரணம், நமக்கு கிடைத்திருக்கும் பேச்சு சுதந்திரம்.இந்த பேச்சுரிமைதான் வல்லரசின் குடிமக்கள் என
ப்படும் சீனர்களுக்கு கூட நம் மீது பொறாமை ஏற்படுத்தும் ஒரே விஷயமாகும்.

இந்த பேச்சுரிமை பறிக்கப்பட்டபோதுதான் இரண்டாவது சுதந்திர போராட்டம் என அழைக்கப்பட்ட எமர்ஜென்ஸி யுத்தம் நடந்தது.

ஒரு குடும்பத்தின் மீது,தனிப்பட்ட ஒரு தலைவன் மீது நாம் வைக்கும் கண்மூடித்தனமான விசுவாசங்கள்,தனிமனித துதிபாடல்களாக உருவெடுக்கும்போது,அந்த தலைவன் புகழ்ச்சியால் மதி மயங்குகிறான்,சர்வாதிகாரியாக உருமாறுகிறான்,இதற்கு சமீபகால உதாரணம்,பேச்சுரிமைக்கு எதிரான மம்தாபானர்ஜியின் நடவடிக்கைகள்.

பேச்சுரிமை என்ற ஒன்று மட்டுமே உலக நாடுகளில் நம்மை தனித்து அடையாளம் காட்டுகிறது.அதையும் இழந்துவிட்டால் நம்மை பெருமைபடுத்தி சொல்ல எதுவும் இல்லை எனலாம்.எனவே தனிமனித துதிபாடல்களை தவிர்ப்போம்.சுயமரியாதையுடன் வாழத்தலைபடுவோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment