Wednesday 22 August 2012

காமராசர்

இங்கே நம் இரண்டு பேருக்கு மட்டும்தான் சாப்பாடு,சிக்கனமாக இருக்கணும்,தேவையான அரிசி,பருப்பு எல்லாம் பக்கத்து ரேஷன் கடையில் வாங்கிக்கோப்பா என்றார் காமராசர்.

அங்க வாங்கும் அரிசி வாடை அடிக்குது அய்யா.வேறு எங்காகிலும் வாங்கலாம், நல்ல சாப்பாடு சா
ப்பிடலாம் அய்யா என்றாராம் உதவியாளர் வைரவன்.

முதலமைச்சர்தாம்ல இந்த அரிசியை முதலில் சாப்பிடணும்,இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ,அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம்,ஜனங்க என்ன சாப்பிடறாங்களோ அதுதான்யா நமக்கும் சாப்பாடு என்றாராம் கோபமாக.

என்னே ஒரு எளிமையான குணம் கர்மவீரரிடம் பாருங்கள்.காமராசர் காலமானபோது அவரிடம் இருந்தது பத்து வேட்டி,சட்டைகளும்,66 ரூபாய் பணமும்தான்.

இத்தகு எளிமையான குணம் இன்றைக்கு இருக்கும் தலைவர்கள் எவரேனுக்கும் இருக்கிறதா?

நாந்தான் அடுத்த எம்ஜிஆர்,அடுத்த கருணாநிதி என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.ஆனால் நாந்தான் அடுத்த காமராசர் என்று எவரேனும் சுய நலத்துக்காக சொல்வாரேயானால் சொல்பவர் மனசாட்சியே அவரை கொன்று விடும்.அதனால்தான் எவரும் சொல்லிக்கொள்வதில்லை போலும்.

No comments:

Post a Comment