சொர்க்கம்,
நரகம் உண்டென்பது உண்மையா?இதை எவரேனும் நேரில் கண்டு வந்து
சொல்லியிருக்கிறார்களா? உன்னுடைய முன்னோரும்,என்னுடைய முன்னோரும்
சாகும்வரையில் நல்லி எலும்பையும்,முட்டி எலும்பையும் கடித்து நொறுக்கி
ரசித்து ருசித்து சாறு குடித்ததை நானும் நீ
யுமல்லவா
அறிவோம்.அப்படிப்பட்ட முன்னோர் இறந்த பிறகு சுத்த சைவம் ஆகிவிட்டார் என்று
கதை கட்டி விட்டது யார்?எவருடைய வயிற்றுப்பிழைப்புக்காக,வருமானத்துக்காக
திதி என்ற பெயரில் காய்கறிகளையும்,பலவகை
பழங்களையும்,இனிப்புகளையும்,தானியங்களையும் புரோகிதனுக்கு தானமாக
கொடுக்கும் வழக்கம் நம்மிடையே திணிக்கப்பட்டது?யாருக்காக? இது யாருக்காக?
No comments:
Post a Comment