Wednesday 22 August 2012

கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு

வாழும் இடத்திற்கேற்ப,பூகோளரீதியாக அங்கு வாழும் மனிதனின் நிறம் இயற்கையால் நிர்ணயிக்கப்படுகிறது.
உடல் நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கும்,அதனடிப்படையிலேயே நிறமும் அமைந்து விடுகிறது.

சூரிய ஒளி மெலனோ சைட்ஸ் செல்க
ளின் உற்பத்தியை அதிகமாக உற்பத்தி செய்ய தூண்டுவதால்தான் குளிர்ப்பிரதேசங்களில் வாழ்பவர்களை விட வெப்பப்பிரதேசங்களில் வாழ்வோர் கறுப்பாக இருக்கிறார்கள்.

காரணம் இப்படியிருக்க,இயற்கை நமக்கு நிர்ணயித்த மாநிறத்தை வெறுத்து எப்படியாகிலும் சிகப்பாகிவிட மாட்டோமா என்று ஏங்குவது நம்மினமாகத்தான் இருக்கும்.

அயல் நாட்டிலிருந்து படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள்,அதன்பிறகு வந்த வெள்ளையர்களின் நிறம், நீண்ட மூக்கு இவற்றால் கவரப்பட்ட தமிழன் மனதில் தன் நிறம் குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிவிட்டது போலும்.அதனால்தான் அடேய் கருவாப்பயலே,கருஞ்சட்டி மூஞ்சா என்று தன் இனத்தின் நிறத்தையே கேலி செய்யும் காமெடிக்காட்சிகள் சினிமாவில் வரும்போது அதையும் வயிறு குலுங்க சிரித்து ரசிக்கிறான்.

இதில் ஆபத்தான விஷயம் சிவப்பாக,வெள்ளையாக இருப்பவர் கறுப்பாக இருப்பவரைவிட நல்லவராக,உயர்ந்த குணங்கள் உடையவராக,புத்திக்கூர்மையுடன் இருப்பார் என்று நம்புவது.

இத்தகு நிறத்தின்பொருட்டு தமிழனுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையால்தான்,சிறிதளவும் பயன்கொடுக்காது என்று உறுதியாக தெரிந்தும்,சிவப்பு நிறம் கொடுக்கும் கிரீம்கள் விற்பனை சக்கைபோடு போடுகிறது போலும் தமிழகத்தில்.

No comments:

Post a Comment