Friday 10 August 2012

வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

வாழ்ந்தவர் கோடி,மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?ஒருவர் எத்தனை பெரிய அறிஞராக இருந்தாலும் அவருக்கு சமூகத்தின்பால் இருந்த அக்கறைதான் மக்கள் மனதில் அவரை வாழச்செய்கிறது.காங்கிரஸ் இயக்கத்தின் மிகப்பெரும் தூண்களாக விளங்கியவர்கள் யாரென
்றால் அனைவரும் சத்தியமூர்த்தி,ராஜாஜி,காமராசர் என்று கூறுவோம்,ஆனால் இவர்களில் இன்றைக்கும் மக்களால் நேசிக்கப்படுபவர் யார் என்றால் அது காமராசர் மட்டுமே.
சத்தியமூர்த்தி பேச்சாற்றலால் வெள்ளையரையே கதிகலங்கச்செய்தவர் என்றாலும் தேவதாசிமுறை வேண்டும் என்று அவர் சட்டசபையில் பேசியதே மக்கள் மனதில் இன்றும் நிழலாடுகிறது.
மூதறிஞர் ராஜாஜி என்கிறோம்,ஆனால் வழக்கத்திலிருந்து ஒழிந்து கொண்டிருந்த குலத்தொழில் முறையை மீண்டும் நிலை நாட்ட அவர் கொண்டு வந்த குலக்கல்வித்திட்டம் இன்றும் மக்களிடம் வெறுப்புடன் பேசப்படுகிறது.
ஆனால் பள்ளிப்படிப்பையே பாதியில் கைவிட்ட காமராசர் இன்றும் மக்களால் கர்மவீரர் என்று பாசத்துடன் போற்றப்படுகிறாரே ஏன்? ஏனென்றால் அவருக்கு சமுதாயத்தின் மீதிருந்த அக்கறை.அவருடைய காலத்தில்தான் வைகைஅணை,மணிமுத்தாறு,சாத்தனூர்,அமராவதி,கிருஷ்ண்கிரி,ஆரணியாறு போன்ற பெரிய மற்றும் சிறிய அணைத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,திருச்சி பெல் கம்பெனி,மணலி சுத்திகரிப்பு நிலையம்,ஊட்டி பிலிம் தொழிற்சாலை,கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் போன்றவை ஆரம்பிக்கப்பட்டன.
இன்னொரு முக்கியமான சாதனை.குழந்தைகளுக்கு மதிய உணவு,சீருடை போன்றவை,இது ஏழைக்குழந்தைகளை பள்ளியை நோக்கி வரச்செய்யவேண்டும் என்ற நோக்கில் துவங்கப்பட்டது.
இன்னுமொரு ஆச்சர்யமான விஷயம் இன்று தமிழகத்தில் இருக்கும் 50,000 அரசு பள்ளிகளில் 27,000 பள்ளிகள் காமராசரின் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டவை.இத்தகு காரணங்களால்தான் கற்ற கல்வியால் சான்றோர் என அழைக்கப்பட்டவர்கள் எல்லாம் மக்கள் மனங்களில் இடம்பெற முடியாதபோது பள்ளிப்படிப்பையே பாதியில் நிறுத்திய காமராசர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் என மக்களால் பாசத்துடன் அழைக்கப்படுகிறாரோ.

No comments:

Post a Comment