ஆப்ரிக்க
நாடான மாலியில் இஸ்லாமிய மதப்பழமைவாதிகளின் அடாவடிசெயல்கள்,மதத்தின்
பெயரால் நடைபெறும் மனித நேயமற்ற மிருகத்தனமான தண்டனைகளால்
வெறுத்துப்போயிருக்கும் அந்நாட்டு இளைஞர்கள்,இத்தகைய பழைமைவாதிகளுக்கு
எதிராக ஒன்று கூடத்துவங்கி இருக்கிறார்களாம
்,மற்றொரு
இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்கள் அவர்கள் உரிமைக்கான மாநாடு ஒன்றை
நடத்தியிருக்கிறார்கள்,அரசு அலுவலகங்களில் பெண்கள் பலரும் பணியில்
இடம்பெறத்துவங்கியுள்ளனர்.இத்தகைய செய்திகளை படிக்கும் போது உண்மையில்
மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தியாவில் தேவதாசிமுறை,உடன்கட்டை
ஏறுதல்,பால்யவிவாகம் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட்டு அவை
பெருமளவு ஒழிந்து போனதுபோல் உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் நடைபெறும்
மூட நம்பிக்கைகள் துடைத்தெறியப்பட வேண்டும்.பெண்கள் சுயமரியாதையோடு
வாழத்தலைப்பட வேண்டும்.மனிதன் மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட
வேண்டும்.
No comments:
Post a Comment