Thursday, 16 August 2012

ஈமு - அடுத்தவர் மீது பழி

ஏன்? எதற்கு? என்று கேள்வி கேளு,எதையும் ஆராய்ந்து பாருன்னு பெரியவங்க பல பேர் சொல்லியிருக்காங்க,அதையெல்லாம் கேட்டு அதன்படி நடக்கிறாங்களா?

மூட நம்பிக்கைகளை விட்டொழி,கடவுளின் பெயரால் உன்னை ஏமாற்றுபவனை நம்பி வீணாகாதே என்று சொன்னவர்கள் பேச்சைக்க
ேட்டு நடந்திருக்கிறார்களா?

சரி அதை விடுங்க,இந்த ஈமுகோழி குறித்து பத்திரிக்கைகளில் சந்தேகம் எழுப்பப்பட்டு கட்டுரைகள் வெளிவந்த போது எச்சரிக்கையானார்களா?

ஆனால் இப்போ ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்து ஏமாந்து போன பிறகு,அந்த ஈமுகோழி வளர்ப்பு குறித்து தொலைக்காட்சி விளம்பரங்களில் பணத்திற்காக நடித்து விட்டுப்போன நடிகர்கள் வீட்டை முற்றுகையிடுவோம் என்று சொல்வது என்ன நியாயங்க?

No comments:

Post a Comment