ரேபிஸ்
குறித்து நான் ஏற்கனவே பதிவுகள் செய்திருக்கேன்,இருப்பினும் மீண்டும் ஒரு
பதிவு. நான் இயற்கை மருத்துவம்,மூலிகைகள்,சித்தா,ஆயுர்வேதத்தில் மிகுந்த
ஆர்வமுடையவன்.ஆயினும் வெறிநாய் கடித்தது என்றால் ரேபிஸ் தடுப்பு ஊசி
போட்டுக்கொள்வதே புத்திசாலி
த்தனம்
என்பேன்,அதுதான் நம்மை காப்பாற்றும்,ஒன்றைத் தெளிவாக தெரிந்து
கொள்ளவேண்டும்,ரேபிஸ் நோயை தடுக்கமுடியுமே தவிர வந்தபிறகு
தடுக்கமுடியாது.யாரோ சொன்னார்கள் என்று நாட்டுமருந்து,பச்சிலை வைத்தியம்
செய்து கொள்ளப்போகிறேன் என்றால் பாடைக்கு ஆர்டர் கொடுத்துட
வேண்டியதுதான்,என்னை ஒரு நாய் கடித்தது,பச்சிலை வைத்தியம்
சாப்பிட்டேன்,சரியாகிவிட்டது என்று எவரும் கூறுவார்களேயானால் அவர்களை
கடித்தது வெறிநாய் அல்ல என்று உறுதியாக கூறலாம்,இது உயிர் சம்பந்தப்பட்ட
விஷயம்,தயவுசெய்து ரிஸ்க் எடுக்காதீர்கள். நாய் கடித்தவுடன் மருத்துவரை
அணுகி சிகிச்சையை துவங்கி விடுங்கள்,காலதாமதம் வேண்டாம் மருத்துவர்
அறிவுரைப்படி கடித்த நாயையும் சில நாட்களுக்கு கவனித்து வாருங்கள்.தயவு
செய்து இது குறித்த தெளிவினை நண்பர்களுக்கும் வழங்குங்கள், நன்மை பயக்கும்
No comments:
Post a Comment