Sunday 7 October 2012

ஃபேஸ்புக் காதல்

ஃபேஸ் புக்கில் காதல்வலை,பெண் கர்ப்பம்,இளைஞருக்கு போலிஸ் வலைவீச்சு.

துயர் துடைக்க ஃபேஸ்புக்கில் பணம் வசூல் மோசடி.ஏமாந்தவர்கள் புலம்பல்.

இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாகவா இருக்கிறது. நாட்டை உலுக்கும் படி ஒரு துயரம் நடந்தால் அதற்கு உதவ நினைத
்தால் முதல்வர் நிவாரண நிதிக்கோ அல்லது துயரம் நடந்த மாவட்டத்தின் ஆட்சியருக்கோ பணம் அனுப்பலாமே! இந்த அடிப்படை விஷயங்கள் கூட அறியாமல் ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவதில் என்ன நியாயம்?

ஃபேஸ் புக் என்பது ஒரு சமூக வலைத்தளம்,கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் இடம் மட்டுமே.இந்த நிலைக்கு மேல் செல்பவர்கள் ஏமாந்து போனால் ஃபேஸ்புக் எப்படி பொறுப்பாக முடியும்? இது என்ன மேட்ரிமோனியல்.காம்-ஆ என்ன?

ஒவ்வொரு தவறுக்கும் ஏமாந்து போனவர்களின் எச்சரிக்கையின்மை மற்றும் விழிப்புணர்வு இன்மையே முழுக்காரணமாக இருந்திட இயலும்.வேறு எதுவும் காரணமாக இருக்க இயலாது.

மாருதி 800 காருக்கு அஷோக் லே லேண்ட் டாரஸ் வண்டி எஞ்சினை பொருத்த முயற்சி செய்யக்கூடாது பாஸ்.

No comments:

Post a Comment