Sunday 7 October 2012

இலவச லேப்டாப்

நான் 9ம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக என்னுடைய பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்கப்பட்டது.எங்களுக்கு கம்ப்யூட்டர் என்னவென்று தெரியாத நேரம் அது.(இப்போதும் அதே நிலைதான்) கம்ப்யூட்டர் என்றால் இயந்திர கைகால்கள் இருக்கும் என்ற கற்பனையில் கம்ப்யூ
ட்டரை பார்க்க அந்த அறையை எட்டிப்பார்க்க முயலுவோம்.தோட்டவேலை ஆசிரியர் குச்சியை எடுத்துக்கொண்டு விரட்டி அடிப்பார்.

இன்று நிலைமை வேறு.பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படுகிறது.மாணவ,மாணவிகள் பேருந்துகளில் அதை இயக்கிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால் அதற்கும் வேட்டு வைக்கும் முயற்சி நடைபெறுகிறது.

இன்றைக்கும் கிராமப்புற மாணவர்களில் பலர் தங்களின் வறுமை சூழலை சமாளித்தே கல்வியை தொடர்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.இத்தகு மாணவர்களை குறிவைத்து அரசு வழங்கிய லேப்டாப்புகளை விலைக்கு வாங்க ஊருக்கு ஒரு கூட்டம் அலைகிறது.விலை 7000 -ல் இருந்து 12000 வரை போகிறதாம்,என்ன ஒரு கேவலமான மனிதர்கள் பாருங்கள்.

இதை பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.இப்படித்தான் அந்த காலத்தில் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள்,பூமிதான நிலங்கள்,எஸ்/எஸ்டி,பெண்கள்,முன்னாள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட கண்டிஷன் பட்டா நிலங்கள் எல்லாம் அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி பறிக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

படிக்கிற பிள்ளைகள் பாவம்,அவர்களை விடுங்கப்பா. நீங்கள் அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி பறிப்பது அவர்களின் கம்ப்யூட்டரை அல்ல,கம்ப்யூட்டர் அறிவு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு விற்ற பிறகும் அந்த ஏழை மாணாக்கர்களின் மனதில் தங்கள் கம்ப்யூட்டரை ஏழ்மையால் இழந்த ஏக்கமும்,சோகமும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

No comments:

Post a Comment