Sunday 7 October 2012

முள்ளிக்கீரை

இதன் பெயர் முள்ளிக்கீரை. 10 வருடங்களுக்கு முன்பு வரை இந்த கீரையை நான் சாப்பிட்டதில்லை.ஒருமுறை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வார்த்தை சித்தர் வலம்புரிஜான் அவர்கள் இந்த கீரையின் பெருமைகளை எடுத்துக்கூறியதைக்கண்ட பிறகுதான் முதன்முதலாக சுவைத்து ப
ார்த்தேன், நல்ல சுவை.அதன்பிறகு இதனை அடிக்கடி பயன்படுத்துகிறேன்.

மற்ற எந்தகீரைகளை விடவும் சுவைமிகுந்தது,சத்துக்கள் நிறைந்தது.பார்ப்பதற்கு முளைக்கீரை போன்று காணப்படும்,தமிழகம் எங்கும் தானாக விளைந்து காணப்படுகிறது.இந்த கீரையின் தண்டு சிவப்பாக காணப்பட்டால் அது செம்முள்ளிக்கீரையாகும்.அதுவும் மிகுந்த பலன்கள் தரக்கூடியதே.

இதில் தண்டுகளில் காணப்படும் முட்கள் காரணமாகவே மனிதன் இதை விவசாயம் செய்யாமல் விட்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.இதில் ஏகப்பட்ட தாதுக்களும்,விட்டமின்களும் நிறைந்திருக்கின்றனவாம்.

இலையை கீரையாக சமைத்து அடிக்கடி உண்டுவந்தால் பசியை தூண்டும்,ஜீரணசக்தி அதிகரிக்கும்,மலம் கெட்டிப்படும்.உடலுக்கு பலம் கூடும்.

இதன் வேரை சாம்பலாக்கி சோறு வடித்த நீரில் குழைத்து கட்டிகள் மீது பற்றுப்போட கட்டிகள் உடையும்.

இந்த கீரை அடிக்கடி உண்டுவந்தால் சிறுநீர்க்கோளாறுகளை தீர்க்கும்.முள்ளிக்கீரைவேர்,பிரண்டைவேர்,சோற்றுக்கற்றாழைவேர்,கடுக்காய்,சுக்கு,மிளகு,பூண்டு ஆகியவற்றை தலா 5கிராம் எடுத்து அரைத்து மோரில் கலக்கி குடித்து வர மூல நோய்கள் ஓடிவிடும்.

இயற்கை நமக்கு கொடுத்துள்ள கொடைகளில் ஒன்று முள்ளிக்கீரை,தானாக விளைகிறது, நம் அறியாமையால் வீணாகப்போகிறது.மற்ற எல்லாக்கீரைகளிலும் மருத்துவ குணத்தில் மேலே நிற்கிறது.ஆனால் நாம் அதை பயன்படுத்துவதில்லை,இனி அதை பயன்படுத்தி நலம் பெறுவோமா?

No comments:

Post a Comment