Sunday 7 October 2012

பூக்காரம்மா

சில நேரங்களில் கொள்கைகளில் சமரசம் செய்யவேண்டியிருக்கிறது.

சைக்கிளை மாங்கு மாங்கென மிதித்துக்கொண்டு ப்ப்ப்பூவெய்ய்ய் என பூக்காரம்மா ராத்திரி ஒன்பது மணிக்கு குரல்கொடுக்கும் போது கடுப்பா இருக்கும்.

ஏந்தான் தினமும் ஃபோட்டோவுக்கு பூ போட காசை வ
ேஸ்ட் பண்ணறீங்களோன்னு என் வொய்ஃப்கிட்டயும்,அம்மாவிடமும் சலித்துக்கொள்வேன்.

ஒரு நாள் என் அம்மாவிடம் கேட்டேன்,அம்மா ஊரில் எந்த தெருவுக்குள் போனாலும் இந்த பூக்காரம்மா கண்ணில் படுது,ராத்திரி 9.30 மணிக்கு கூட பூ விக்குதேன்னு கேட்டேன்,அவங்க சொன்ன பதில் இது.

அந்த பூக்காரம்மாவோட கணவர் நோயாளியாம்,வேலைக்கு செல்லமுடியாதாம்,இவருடைய வருமானத்தில்தான் குடும்பம் நடக்குதாம்.இவருடைய எம்பிஏ படிக்க வைத்து விட்டாராம்,பொண்ணு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறாராம்.

இதை கேட்டவுடன் வாயை மூடிக்கொண்டேன்,ஏன் பூவை வாங்கி காசை வேஸ்ட் பண்ணறீங்கன்னு கேட்கறதை விட்டுட்டேன்.

No comments:

Post a Comment