Sunday 7 October 2012

வயசாகி இருந்தால்தான் சான்ஸ்


வளர்ந்த நாடுகளின் தலைவர்களை பார்க்கும் போது பொறாமையா இருக்கு. விளாடிமிர்புடின் பாராசூட்டில் இருந்து குதித்தார்,டென்னிஸ் ஆடுகிறார்,வேட்டைக்கு போகிறார் என்ற செய்திகளை படிக்கும் போதும்,ஒபாமா,சர்கோஸி ஆகியோர் விறு விறுவென்று மிடுக்காய் நடந்து செ
ல்வதை காணும்போதும் நம் நாட்டு வயோதிக இளைஞர்களை நினைத்து பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை.

நாம் பள்ளியில் வரலாறு புத்தகங்களில் படித்திருப்போம்,ஔரங்கசீப்புக்கு பிறகு முகலாய சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்தது என்று.மிகப்பெரும் மன்னனுக்கு பிறகு ஒரு சாம்ராஜ்ஜியம் சடாரென வீழ்ச்சியை நோக்கி செல்ல காரணம் என்ன?

ஔரங்கசீப் 92 வயது வரை உயிர் வாழ்ந்தார்,தான் மறையும் வரை அரசாட்சி முழுவதையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தாராம்.அவருடைய பிள்ளைகள் அவரிடம் சென்று பேசவே அஞ்சுவார்களாம்,விளைவு அவருக்கு அடுத்த தலைமுறைக்கு நிர்வாகத்திறன் இல்லாமல் போனது.சாம்ராஜ்ஜிய வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

நம் நாட்டிலும் கூட வயோதிக தலைவர்கள் வாலிபர்களிடம் அரசுப்பொறுப்பை அளிக்க முன் வருவதில்லை.பதவி மோகம் அவர்களை மற்றவர்க்கு வழிவிடாமல் தடுக்க செய்கிறது.

நல்ல ஆளுகைத்திறனுக்கும்,சிறந்த நிர்வாகத்துக்கும் உடல் வலிமையும் அவசியம்.பொது நிகழ்ச்சிகளில் வாஜ்பாய்,சங்கர் தயாள் சர்மா,அப்துல்கலாம் போன்றோர் தடுமாறிய செய்திகளை செய்தித்தாள்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கண்டிருக்கிறோம்.

இப்படி ஒரு நாடு முழுக்க பெரும்பாலான தலைவர்கள் வயோதிகர்களாக, மருத்துவ சிகிச்சையை ரகசியமாக எடுத்துக்கொண்டு இருப்பவர்களாக இருந்தால் அந்த நாடு எப்படி பீடு நடை போட முடியும்?

ஆனால் வளர்ந்த நாடுகளில் தலைவர்கள் நடுத்தர வயதுக்காரர்களாக துள்ளி குதிக்கிறார்கள்,அவர்கள் நாடும் வளர்ச்சிப்பாதையில் துள்ளிக்குதித்து செல்கிறது.

ஆனால் இங்கே? என்ன செய்வது? நம் தலைவர்கள் 58 வயதுக்கு மேல்தான் வயசுக்கே வர்ராங்க,65 வயதில்தான் இளைஞரணி தலைவராக பொறுப்பேற்கிறார்கள்.
 

No comments:

Post a Comment