Sunday 7 October 2012

கூடங்குளம்

கூடங்குளம் ஆபத்தானதா இல்லையா? அது வேண்டுமா வேண்டாமா? என்று பேசும் முன் அந்த திட்டம் தமிழகத்துக்கு எப்படி வந்தது என்று யோசித்து பார்ப்போம்.

இந்த அணுமின் நிலையத்துக்காக மற்ற மாநிலங்கள் போட்டிபோட அந்த போட்டியில் போராடி வென்று இந்த திட்டம
் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டதா?

இந்த திட்டம் குறித்து ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற்றபோது மற்ற மாநிலங்கள் தந்திரமாக கழன்று கொண்டு நம் தலையில் இதை கட்டிவிட்டன என்பதை யோசித்தோமா?

அணு உலை கட்டி முடிக்கப்பட்டவுடன்,இந்த திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிய கேரளா இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 250 மெகாவாட் தங்களுக்கு பங்கு தரவேண்டும் என்று கேட்கிறதே,அதன் பெயர் அயோக்கியத்தனம் இல்லை, நம்முடைய கையாலாகாத்தனம்.அவன் எச்சரிக்கையாக புத்திசாலித்தனமாக மாநில நலனில் அக்கறையோடு இருக்கிறான்.

சரி இந்த அணு உலை திட்டத்துக்கு பதிலாக வேறு ஏதேனும் மிகப்பெரும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய தொழில் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தால் மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை தமிழகத்திற்கு விட்டுக்கொடுத்திருப்பார்களா?

உலகம் முழுதும் இருக்கும் தமிழர்களுக்கு பூர்வீகம் தமிழகம் மட்டுமே,இந்த தமிழகத்தின் தலைப்பகுதியில் கல்பாக்கத்தில் ஒரு அணு உலை,கால் பகுதி கூடங்குளத்தில் ஒரு அணு உலை. நாளை எவனோ ஒரு எதிரியால் இந்த அணு உலைகள் தாக்கப்படுமேயானால் தமிழகம் என்னவாகும்? தமிழருக்கென்று ஒரு நிலம் இருக்குமா?

நியாயமாகப்பார்த்தால் இது போன்ற அணு உலைகள் உத்திரப்பிரதேசம்,பீகார்,ராஜஸ்தான்,ஹரியானா,மத்தியப்பிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில்தான் அமைக்கப்படவேண்டும்.ஒரு இடம் அழிந்தால்கூட மற்ற இடங்களில் இந்திக்காரன் வாழ்வான்.

ஆனால் தமிழகம் அழிந்தால் தமிழினமே இருக்காது பாஸ்.ஏனெனில் தமிழனுக்கு என்று இருப்பது தமிழகம் மட்டுமே.

No comments:

Post a Comment