Sunday 7 October 2012

தமிழ்நாடு

பிரிட்டனிடம் இருந்து 1947-ல் பெற்றதுதான் உண்மையான சுதந்திரமா? ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட வரையறைக்குட்பட்ட சுதந்திரம் எப்படி உண்மையான சுதந்திரமாக இருக்க இயலும்?

இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டு வ
ந்த நிலையில் அம்பேத்கர்,பெரியார் உள்ளிட்ட பல ஆன்றோர்களும்,சான்றோர்களும் போராடியதன் விளைவாகவே ஓரளவுக்கு வர்ணாசிரமத்தினால் பல வர்ணங்களாக வகைப்படுத்தப்பட்டவர்கள் ஓரளவு சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம்.இருப்பினும் முழுமையான சமூகநீதி இன்னும் கிடைக்கவில்லை.

இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு ஏற்றத்தாழ்வுகளில் உழலும் மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கோடிக்கணக்கில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகிறார்கள்.போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.இந்த சமூக நீதி போராட்டங்கள் இந்த மண் முழுமைக்குமே அவசியமாகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க,என்னைப்போலவே எனக்கிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்ற அந்த மக்களை எல்லாம் மறந்து விட்டு தமிழ்தேசியம்,தனித்தமிழ்நாடு என்ற குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

No comments:

Post a Comment