Sunday 7 October 2012

தேனீக்கள்

இந்த வாரம் ஆனந்தவிகடனில் ஒரு செய்தியை படித்து மனதில் ஏற்பட்ட உதறலின் விளைவால் இந்த பதிவு.

உலகில் இருக்கும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கம் தேனீக்களின் உதவியால் அயல் மகரந்தசேர்க்கை வாயிலாகவே நடைபெறுகின்றன.

தேனீக்கள் முற்றிலும் அழிந்தால் தாவரங்கள் இல்லை,உணவு இல்லை,பிறகு மனிதகுலமே இல்லை.தேனீக்கள் முற்றிலும் அழியும் நிலை வந்தபிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனிதகுலமே அழியத் துவங்கும் என மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அன்றே கூறியுள்ளார்.

கடந்த 2010-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி தேனீக்கள் ஆஸ்திரேலியா,ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பாதியாகவும்,அமெரிக்காவின் ஒரு சில பகுதிகளில் 80 சதவிகிதமும் காணாமல் போய்விட்டனவாம்.

தேனீக்கள் 5கிமீ சுற்றளவுக்கு சென்று தேன் சேகரித்து மீண்டும் தங்கள் கூட்டிற்கு திரும்ப காரணம் பூமியின் மின் காந்த அலைகளாம்.இப்போது செல்போன் கோபுரங்களின் அலைவீச்சினால் தேனீக்கள் மின் காந்த அலைகள் சிதறடிக்கப்பட்டு தேனீக்கள் கூட்டம் கூட்டமாக செத்து மடிகின்றனவாம்.இதற்கு ”காலனி கொலாப்ஸ் டிசார்டர்” என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே செல்ஃபோன் என்ற ஒரு சாதனத்தால் தினந்தோறும் நம் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறோம்.இப்போது இந்த பேரதிர்ச்சி தகவல் வந்து மிரட்டுகிறது.

மனிதகுலத்துக்கு அழிவு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலே வீட்டுக்கொரு செல்ஃபோன் கொடுப்பது எங்கள் இலக்கு என்று அரசாங்கங்கள் திட்டம் வகுத்துக்கொண்டிருப்பது வேடிக்கையான ஒன்று.

எது எப்படியோ அவ்வாறு ஓரிரு வருடங்களில் மனித குலம் அழியும் நிலை ஏற்பட்டால் நாத்திகனான நான் ஆத்திகர்களிடம் ஒரு கேள்வி கேட்டுவிட்டு சாவேன்,எங்கேப்பா இறுதி தீர்ப்பு நாள்? இனி எப்போதுதான் வருவார்கள் தேவகுமாரனும்,தேவதூதனும் என்று?

No comments:

Post a Comment