Sunday 7 October 2012

முப்பது கோடி முகமுடையாள் ,உயிர். மொய்ம்புற வொன்றுடையாள்

முப்பது கோடி முகமுடையாள் ,உயிர். மொய்ம்புற வொன்றுடையாள் -இவள். செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற். சிந்தனை ஒன்றுடையாள் என்று பாடினான் புலவன் அன்று.

உண்மையில் சிந்தனை ஒன்றாக இருக்கிறதா இன்று?
உலகத்தில் இருக்கும் தமிழர்கள் அனைவராலும் வெறுக்
கப்படும் மனிதமிருகம் ராஜபக்க்ஷே.அந்த மனிதனை ஆதரிக்கும் தமிழன் எவரேனும் இருக்கிறானா? அப்படி ஆதரித்தால் அவன் பச்சைத்தமிழனா?

அப்படிப்பட்ட கொடியவனை இனவெறி பிடித்தவனை இந்தியாவிற்கு அழைத்து வந்து புத்தரின் பெயரால் விழா எடுக்கிறார்கள்.யார் எடுத்தது,இதன் பின்னணியில் இருப்பது யார் என்று பார்த்தால் ஒரே நாடு ! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! என முழங்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த்சின்ஹாவின் குடும்பத்தினர்.

இதுதான் ஒரே சிந்தனைக்கு அழகா? தமிழர்களின் உள்ளக்குமுறல் வட இந்திய பாஜக தலைவர்களுக்கு தெரியாதா? அவர்கள் நினைத்திருந்தால் இதை தடுத்து நிறுத்தி இருக்க முடியாதா? முடியவில்லை,ஏனெனில் தமிழந்தானே? சில நாட்களில் சுரணையற்று மறந்து போவான் என்ற எண்ணம்தானே?

இங்கே தமிழகத்தில் காவிக்கட்சியின் மோடிவித்தைகளில் மயங்கி தமிழர் நலனை மறந்திருப்போரே! உங்கள் மத்திய தலைவர்களின் தமிழர் விரோத போக்கை எண்ணிப்பார்த்திடுங்கள்.ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே சட்டம் எனும் சிந்தனை உங்களின் வட இந்தியத்தலைவர்களுக்கு இருக்கிறதா என்று சிந்தனை செய்திடுங்கள்.

ஆராய்ந்து பார்த்திட்டால் அவ்வாறான சிந்தனை இல்லை என்று உணர்வீர்கள்,உணர்ந்து பின்னும் காவிக்கட்சியின் புகழ் பாடுவீர்களானால் உங்கள் மூளை காவி என்னும் குளோரோஃபார்ம் ம்ருந்தால் மறத்து உணர்ச்சியற்று போய் விட்டது என்றே உணரப்படும்.

No comments:

Post a Comment