Sunday 7 October 2012

பாதகஞ் செய்பவரைக் கணடால்

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

என்றான் பாரதி.

அலகாபாத்தில் தன்னை தொடர்ந்து பல நாட்களாக கேலி,கிண்டல் செய்து வந்த இளைஞன் ஒருவனை கடைவீதியில் பலரும் பார்க்க ஒரு பெண் பளார் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்திருக்கிறாள்,அவன் அலறி ஓடியும் ஆத்திரம் அடங்காமல் அவன் மோட்டார்பைக்கை தீயிட்டு கொளுத்தி இருக்கிறாள்.

இந்த துணிச்சலும்,வீரமும் எல்லாப்பெண்களுக்கும் அமைந்து விட்டால் காலித்தனங்கள் காலி செய்து கொண்டு ஓடிவிடுமல்லவா?

இந்த துணிச்சல் பெண்ணினத்திற்கு வர என்ன செய்யவேண்டும்? முதலில் பெண்களை போலியாக புகழ்வதை நிறுத்த வேண்டும்,பெண் என்பவள் புனிதமானவள்,தெய்வாம்சம் பொருந்தியவள்,சாந்த சொரூபமானவள் போன்ற பசப்பு வார்த்தைகளை கூறி அவளை முடக்கி வைப்பதை நிறுத்த வேண்டும்.

பெண்ணே நீ ஆண் மகனை போன்றவள் என்பதை விட ஆணுக்கு சரி நிகர் சமமானவள் என்று உணர்த்தி வளர்க்க வேண்டும்,ஆணுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும்,உணர்வுகளும் பெண்ணுக்கும் பூரணமாக உண்டு என்ற எண்ணம் பெண்ணினத்துக்கு தோன்றிவிட்டால் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தானாகவே காணாமல் போகும்.

No comments:

Post a Comment