Sunday 7 October 2012

கழைகூத்தாடி

காலையில் ஒரு நண்பரை பேருந்து நிலையத்தில் விடுவதற்காக சென்றபோது கண்ட காட்சி இது.தாய் மேளம் கொட்டி தாளம் போட தந்தை வழியில் போவரை அழைக்க இந்த சிறுமி கயிற்றின் மேல் நடந்து வித்தை காட்டுகிறாள்.

இது போன்று பரம்பரையாக வித்தைகாட்டி பிழைப்பு நடத்து
ம் இனத்தை சார்ந்த குழந்தைகளை கல்விச்சாலையில் சேர்த்து பள்ளிகளில் அவர்களை சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களாக மெருகேற்றலாம் அல்லவா? அதே போல் இந்த இனத்தை சார்ந்தவர்களை உடற்கல்வி ஆசிரியர்களாக்கினால் பல ஜிம்னாஸ்டிக் வீரர்கள் உருவாகி இந்த தேசம் பல சர்வதேச விருதுகளை குவித்திட காரணமாக அமைவார்கள் அல்லவா?

என்ன செய்வது இவர்களுக்கு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு எண்ணிக்கை பலம் இல்லை என்கிறீர்களா? இது போன்று பல சமுதாயத்தினர் இந்தியத்திருநாட்டில் இருக்கிறார்கள்.

பூம்பூம் மாட்டுக்காரர்கள்,குடுகுடுப்பைக்காரர்கள்,கழைக்கூத்தாடிகள்,காட்டு நாயக்கர்,இருளர் என பல நூறு இனங்கள் சாதி சான்று பெறுவதற்கு கூட வழியில்லாமல் இருக்கிறார்கள்.இவர்களுக்கு உரிய நேரத்தில் சாதி சான்றுகள் வழங்கப்படுமாயின் இந்த இனங்களில் இருந்து படித்தவர்கள் உருவாகக்கூடும்.அவர்களின் இழிநிலை மாறக்கூடும்.

இதில் கொடுமையான விஷயம் இதுபோன்ற இனங்களில் பள்ளி இறுதிவரை படித்து முடிக்கும் இளைஞர்கள் சாதிசான்று கிடைக்காமையால் மேற்படிப்புக்கு வழியின்றி செங்கல்சூளைகளில் முடங்கிப்போகின்ற அவலம் ஏற்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை பலம் இன்மையால் கேட்பாரற்று கிடக்கும் இவர்களுக்காக,ஆதிக்க சாதிகளில் பிறந்திருந்தாலும் மனித நேயத்தோடு தங்களின் வாழ்க்கையையே அர்ப்பணித்துகொண்டு உழைக்கின்ற பேராசிரியர் பிரபாகல்விமணி(கல்யாணி புரொபசர்),வழக்குரைஞர் திரு.ரத்தினம் ஆகியோர் என் பார்வையில் மாமனிதர்களாக தெரிகிறார்கள்.

No comments:

Post a Comment