Sunday 7 October 2012

குரங்கு,முதலை

சிறுவயது முதல் என்னால் விரும்பிப்படிக்கப்படும் மூத்தப்பத்திரிக்கையாளர் திரு.குல்தீப் நய்யார். அவர் கட்டுரைகள் வெளியான காலத்தில் எல்லாம் தினமணிக்கு ஒரு தரம் இருந்தது.அவருடைய பேட்டி இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் வெளியாகி இருக்கிறது.சுவாரசியம
ான பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

91 வயதான அவர் இரவு 9 மணிக்கு தொடங்கிய பேட்டியை அதிகாலை 3.50க்கு முடித்து குட்நைட் சொல்லியிருக்கிறார்.அந்தளவுக்கு பத்திரிக்கை துறையின் மீது ஈடுபாடு அவருக்கு.

எமர்ஜென்சி,இந்திய ஜனநாயகம்,ஊடகத்துறை,தமிழக அரசியல்,கூடங்குளம் போராட்டம், ஈழப்போராட்டம் என பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

வேற்று மொழிக்காரர்,வேறு மாநிலத்தவரான அவர் கூடங்குளம் போராட்டம்,ஈழ விடுதலைப்போர் குறித்து அவர் பேசியுள்ள விஷயங்கள் இங்குள்ள சில பத்திரிக்கைகளின் தமிழர் விரோதபோக்கை நினைவு கொள்ளசெய்து வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

இங்கே தமிழகத்தில் கல்லாகட்டி காசு பார்த்து சொகுசாக வாழ்ந்து கொண்டு தமிழர்களின் போராட்டங்களை ஏளனம் செய்து செய்தி வெளியிடும் ஒரு சில பத்திரிக்கைகளை காணும்போது, குரங்கு பறித்து போட்ட நாவல்பழங்களை ருசித்து உண்டு கொழித்து கடைசியில் அந்த குரங்கின் ஈரலையே சுவைத்து பார்க்க ஆசைப்பட்ட நன்றிகெட்ட முதலையின் கதைதான் நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment