Sunday 7 October 2012

ஓநாய்க்கும் தர்மம்

அணு உலை வேண்டாம் என்று சொன்னால் தேசவிரோதிகளா?தேசத்துரோகிகளா? தேசப்பற்று இல்லாதவர்களா?

காடுகளை ஒட்டிய கிராமங்களுக்குள் திடீரென புகுந்து ஓநாய்கள் குழந்தைகளை தூக்கிச்சென்று தங்கள் இரையாக்குவதை பலமுறை செய்தித்தாள்களில் படித்திருப
்போம்.

அவ்வாறு ஓநாய்கள் குழந்தைகளை கொன்று தின்பதை அறிந்து மனம் பதறி துடிப்போரையே கண்டிருக்கிறோம்.

அந்த ஓநாய்களுக்காக நியாயம் கூறி பேசுவோரை கண்டிருக்கிறோமா? பாவம்பா அந்த ஓநாய்கள்,அவற்றுக்கும் வயிறு இருக்கிறது,அந்த வயிற்றுக்கும் பசி என்று ஒன்று இருக்கிறது,எனவே குழந்தைகளை தூக்கிச்செல்கின்றன என்று ஓநாய்க்கும் தர்மம் பேசுவோரை காண்பது மிகவும் அரிது.

இந்த அணு உலை விஷயத்தில் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கொஞ்சமும் ஆராயாமல்,யோசிக்காமல்,ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலைப்படாமல் தேசியம்,தேசப்பற்று,தேச ஒற்றுமை என பேசுபவர்களை காணும் போது ஓநாய்க்கும் தர்மம் பேசுபவர்களாகவே தெரிகிறார்கள்.

No comments:

Post a Comment