Tuesday 4 September 2012

மதத்தின் பெயரால்

பழங்குடியின மக்களுக்கு இயற்கையாகவே இசையுணர்வும்,ஆடல்பாடல் குணங்களும் நிறைந்திருக்கும்,அங்கே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.

நம் மாநிலத்தில் இருளர் சமுதாய மக்களுடன் பழகியவர்களுக்கு தெரியும் அவர்களுக்கு இருக்கும் இசையுணர்வு.

இது உலகம் பூராவும் 
இருக்கும் பழங்குடியினரிடம் காணப்படும் ஒன்று.ஆப்ரிக்க கறுப்பின மக்களிடமும் இசையுணர்வு அதிகம் இருப்பதை காணலாம்.

இது போலத்தான் ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு பழங்குடியின மக்கள் தங்கள் விழாக்களில் இசையுடன் ஜிப்சி நடனம் ஆடுவது வழக்கமாம்.சமீபத்தில் அவர்களிடையே ஒரு ஆட்டம்,பாட்டம் நிகழ்ச்சி ஒன்று நடக்கும் போது காட்டுமிராண்டி தாலிபன்கள் நுழைந்து இரண்டு பெண்கள் உள்பட பதினேழு பேரை தலை துண்டித்து கொன்று இருக்கிறார்கள்.

மதப்பழமைவாதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு இது ஒரு உதாரணம்.பழமைவாதம் பேசும் இந்த காட்டுமிராண்டிகள் போரிடுவதற்கு மட்டும் நவீன ஆயுதங்கள்,ராக்கெட்டுகள்,ரேடியோ,கையெறி குண்டுகளை துறந்து கத்தியை தூக்கிக்கொண்டு போருக்கு செல்லலாமே.இவர்கள் போரில் காயம்பட்டால் கருஞ்சீரக எண்ணெய்,பேரிச்சம் பழத்தை மறுத்து நவீன மருந்துகளை பயன்படுத்துவது ஏனோ?இவையெல்லாம் இஸ்லாத்துக்கு விரோதமானது கிடையாதா?

மூளைச்சலவை செய்யப்பட்ட மனித இயந்திரங்கள்.இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மனதிலும் இந்த மிருக உணர்வு பதுங்கியிருக்கிறது என்றே கருதலாம்

No comments:

Post a Comment