Tuesday 4 September 2012

அகர் மரம்

அகர்மரம் தமிழ்நாட்டின் கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய மலைப்பகுதிகளில் மட்டுமே நன்றாக விளையும்,ஆனால் தமிழகத்தின் எல்லாப்பகுதிகளிலும் நன்கு வளரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று இன்று பசுமை விகடன் பத்திரிக
்கையில் கட்டுரை கூறுகிறது.

என்னுடைய கேள்வி என்னவெனில் இந்த தெளிவான விளக்கத்தை இவ்வளவு நாட்களாக மக்களுக்கு தெரிவிக்காமல் இவ்வளவு தாமதமாக தெரிவிப்பது ஏன்?

தன்னை வாழவைக்கும் விவசாயிகளுக்கு,பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை அளிக்க வேண்டியது பத்திரிக்கைகளின் கடமையாகும்,ஆனால் இந்திய பத்திரிக்கைகள் அவ்வாறு உண்மையாக நடந்து கொள்வதில்லை.

அன்றே ஈமு கோழி குறித்து இந்த பத்திரிக்கைகள் மக்களுக்கு தெளிவை ஊட்டியிருந்தால் மக்கள் விழிப்புணர்வு அடைந்திருப்பார்கள்,கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருக்காது.

ஒரு பக்கம் ஈமுகோழி பற்றி ஆஹோ ஓஹோவென புகழ்ந்து கட்டுரை.மறுபக்கம் ஈமுகோழி குறித்து சந்தேகம் எழுப்பி சிறு செய்தி.மோசடி நிகழ்ந்த பின்பு நாங்கள் அன்றே சொன்னோம் என்று கூறுவது,இது உண்மையில் அப்பட்டமான ஏமாற்று வேலையே.

இன்று ஈமுகோழி குறித்து எழுதுகிறார்கள்,அதை அன்றே சொல்லியிருக்கலாமே.

கால்நடைத்துறை மட்டும் அன்று மக்களுக்கு உரிய விழிப்புணர்வு கொடுத்திருந்தால் இவ்வளவு பெரிய மோசடி நிகழ்ந்திருக்காது.

இப்போதுகூட அகர் மர வளர்ப்பு குறித்து விவசாயத்துறை சார்பில் மக்களிடம் உரிய தெளிவு கொடுக்கப்படவில்லை,இந்த விஷயத்தில் மோசடி பூதம் எப்போது கிளம்பப்போகிறதோ தெரியவில்லை. கடைசியில் அகர் மரத்தில் அகர் கிடைக்காமல் விறகுக்குக்காக வெட்ட்ப்படும் நிலை உருவாகப்போகிறது.

பத்திரிக்கைகளும் சரி,சம்பந்தப்பட்டத்துறைகளும் கண்கெட்டப்பிறகுதான் சூரியவணக்கம் சொல்லித்தர முயலுகிறார்கள்.

No comments:

Post a Comment