Tuesday 4 September 2012

சாமை,வரகு

அரிசி உணவை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்களே,அந்தக்காலத்தில் நம் தமிழர்கள் எப்படி தாக்குபிடித்தார்கள் என்று யோசித்திருக்கிறேன்.ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த விடை என்னவெனில் வரகு,சாமை,தினை,கம
்பு,கேழ்வரகு ஆகியவற்றை பெருமளவு பயன்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்.

ஒருமுறை நமது தோழர் Sirpi Rajan அய்யா அவர்களை காண ஆரோவில் சென்றபோது அவருடன் இருந்த வெளிநாட்டுக்காரர்கள் மதிய உணவு கொடுத்தார்கள்.அவர்கள் கொடுத்த உணவு முழுக்க சாமை,வரகு,தினைஆகியவற்றில் செய்யப்பட்ட எலுமிச்சை,புளியோதரை மற்றும் கேழ்வரகு தோசை ஆகியவை.சாமை,வரகில் செய்யப்பட்ட சோறு அவ்வளவு அருமையான சுவையாக இருந்தது.அங்கிருந்த ஒரு ஆஸ்திரேலிய பெண் கூறினார், நீங்கள் மறந்து போனதை நாங்கள் சாப்பிடுகிறோம் என்று.

நம்மில் எத்தனை பேருக்கு சாமை,வரகரிசி தெரியும்? ஏன் இந்த தானியங்கள் நம் பயன்பாட்டில் இருந்து மறைந்து போனது?இவை கிடைக்குமிடமாவது நாம் அறிவோமா? நானும் எங்கள் ஊர் முழுவதும் தேடினேன்,தினை மட்டும் கிடைத்தது,வரகு,சாமை கிடைக்கவில்லை.வெறும் அரிசி,கோதுமையை மட்டும் பயன்படுத்துகிறோமே,இது போன்ற தானியங்களையும் தேடி பயன்படுத்தி நலம் பல பெறலாம் அல்லவா?

No comments:

Post a Comment