Tuesday 4 September 2012

இதெல்லாம் நடக்கும்

ஆசிரியர் மகனை என்ன ஆசிரியரே என்று அழைப்பதுண்டோ,மருத்துவர் மகனை என்ன மருத்துவர் அய்யா என்று அழைக்கும் வழக்கம் உண்டோ,ஆனால் புரோகிதர் வீட்டு ஐந்து வயது சிறுவனைக்கூட என்ன சாமி அப்பா இல்லையா? என்று கேட்கும் அளவுக்கு பல கட்டுக்கதைகளை புணைந்து அவற
்றை நமக்கு ஊட்டி நம்மை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் சிறுவர்கள் காலில் விழுந்து வணங்குபவர் கர்நாடகா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த்சிங்.கருனாடகத்தில் மழைவேண்டி அரசு செலவில் 17.5 கோடி செலவில் நடந்த யாகத்தின் ஒரு பகுதிதான் அமைச்சர் இந்த சிறுவர்களின் காலில் விழும்காட்சி.சுயமரியாதை உள்ளவர் எவரேனும் இது போன்ற செயலில் ஈடுபடுவார்களா?

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது உண்மையெனில் அரசு பணத்தை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த,அதுவும் மூட நம்பிக்கைகளுக்காக செலவு செய்ய இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?அரசியல் சாசனம் இதை அனுமதிக்கிறதா?

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால்,எந்த மூட நம்பிக்கைகள் எல்லாம் சிறுக சிறுக நம்ம்முடைய சமூகநீதிப் போராட்டங்களினால் அழித்துக்கொண்டிருக்கின்றன என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அவை எல்லாம் மீண்டும் தலை விரித்து ஆடத்துவங்கிவிடும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.

No comments:

Post a Comment