Tuesday 4 September 2012

குடும்ப வாழ்வில் சிநேகிதம்

வளர்ந்த கதை மறந்து விட்டாய் கேளடா கண்ணா என்று ஒரு அருமையான பாடல் காலையில் டிவியில் பார்த்தேன்.

அதில் வரும் வரி,அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா.

பாடலுக்கு சுவையாக இருக்கலாம்,ஆனால் உண்மை வாழ்வில் தந்தை பெரியார் சொன்னவாறு சிநேகிதர்கள் போ
ல சிநேகிதமாக இருக்க வேண்டும்.

அடைக்கலம், தஞ்சம் என்ற வார்த்தைகள் பெண்ணை ஒரு படி கீழே வைத்திருக்கிறது அல்லவா?

அதிலும் ஆணுக்கு பெண் சமம்,அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்கள் எனும் இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்விலும் ஆணுக்கு பெண் சரி நிகர் என்பதுதானே சரியாக இருக்கும்.

மணமொத்த தம்பதிகளாக வாழ்க்கையை துவக்கிடும் போது அதில் சிநேகிதம் முழுக்க இருந்திடுமானால் அந்த குடும்ப வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் இனித்திடும் அல்லவா?

பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்திலேயே குடும்ப வாழ்வில் சிநேகிதம் என்ற வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்னரேயே பயன்படுத்தி அறிவுறுத்திய தந்தைபெரியாரின் முற்போக்கு சிந்தனையை எண்ணி பூரிப்படைகிறேன்

No comments:

Post a Comment