Tuesday 4 September 2012

ஓடும் உதிரத்தில்......

ஓடும் உதிரத்தில் வடிந்தொழுகும் கண்ணீரில் சாதி தெரிவதுண்டோ!

கண்டிப்பாக தெரியாது என்றார் கார்ல் லேண்ஸ்டைனர்.ஆஸ்திரிய நாட்டைச்சார்ந்த இவர் வெய்னர் என்ற விஞ்ஞானியுடன் சேர்ந்து 1930-ல் நோபல் பரிசு வென்றவர்.

குருதியில் சாதி தெரியாது,ஆனால் இரத்த
த்தில் சில பிரிவுகள் உண்டு.அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் சொந்தமல்ல.

ஆண்,பெண் ஏழை,பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன், நெட்டையன்,குட்டையன் கறுப்பன்,வெள்ளையன்,கீழ்சாதி மேல்சாதி,எல்லா மதத்தவனுக்கும் இரத்தம் ஒன்றே.இரத்தத்தின் பிரிவுகள் மனிதனாக பிறந்தவர்கள் அனைவருக்கும் பொதுவானவை.கறுப்பன் இரத்தம் வெள்ளையனுக்கும்,வெள்ளையன் இரத்தம் கறுப்பனுக்கும் பொருந்தும்.கிறித்தவன் இரத்தம் இஸ்லாமியனுக்கும் இஸ்லாமியன் இரத்தம் கிறித்தவனுக்கும் பொருந்தும் என்ற அறிவியல் உண்மையை கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தினார்.

உண்மை இப்படியிருக்க, இன்னும் என்னய்யா சாதி,மதம் இன்னும் பிற ஏற்றத்தாழ்வுகள் எல்லாம்?மானுடராய் ஒன்று சேருங்கய்யா.

No comments:

Post a Comment